*வீட்டு வாடகை படியை அப்படியே கழிக்கலாம??*



கழிக்க கூடாது என்றே சொல்லவேண்டும்.

ஏன் எனில் கடந்த ஆறாவது ஊதியகுழுவில் வாடகை படி குறைவு என்ற நிலையில் பெறப்பட்ட வாடகை படி  நேரகக் கழிக்கும் போது பெரும்பாலும் கணக்குப்படி ஒத்து வந்துள்ளது


ஆனால் தற்போது அப்படி வர வாய்ப்பு மிகக்குறைவு!

எப்படிதான் கணக்குப்படி கழிப்பது என்பதை கீழே பார்போம்


1.Basic pay +D.A= 10% எடுத்துக்கொள்ளவேண்டும்
2. வாடகை செலுத்தியதற்காண தொகை யில் மேலே உள்ள தொகையை கழிக்க வேண்டும்
எ.க(2-1) கழிக்க வேண்டும்
3. தாங்கள் பெற்ற வாடகை படி
3 கழிக்கும் போது வந்த தொகை (பூஞ்சியத்துக்கு கீழ் எழுதவேண்டாம்)

Note: இதில் எது குறைவோ அதை எடுத்தல் வேண்டும் இதுதான் உண்மையான கழிக்க வேண்டிய தொகை

(இதில் முக்கியமான கவணிக்க வேண்டிய தேவை என்னவென்றால் நீங்கள் செலுத்திய வாடகை தொகை பெரு மற்றும் சிறு நகரம் 50 %  மற்றும் முறையே 40% விட குறைவாக இருத்தல் வேண்டும்)


என்றும் ஆசிரியர்கள் நலனில்

அனிதா விஸ்வநாத்

9629803339

https://tnteacherincometax.blogspot.com









வருமான வரியை சேமிக்க 4 நச் டிப்ஸ்

Income tax முதலீட்டு ப்ரூப் சமர்ப்பிக்க நெருங்கியது காலக்கெடு..

 நடப்பு நிதியாண்டுக்கான, முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க ரெடியாகிவிட்டீர்கள். அதேபோல, அடுத்த நிதியாண்டுக்கான சேமிப்புகளுக்கும் தயாராக வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.


அதிக வருமான வரி செலுத்துதல் என்பதற்கு, உங்களின், மோசமான நிதி மேலாண்மைதான் காரணம். திறமையற்ற வரி-திட்டமிடல், வீட்டுக்கான வருமானத்தை மோசமாக குறைத்துவிடும் என்பது உங்களுக்கே தெரியும்.

எனவே, ஆண்டின் தொடக்கத்தில் ஒரு தெளிவான வரி சேமிப்புத் திட்டத்தை கையில் எடுங்கள். FY2019-20 இன் முடிவை நெருங்கும்போது, வரி சேமிப்பு திட்டங்களை கையில் ரெடியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

விரைவில் ஒரு குட் நியூஸ் சொல்லுவேன்..! சஸ்பென்ஸ் வைக்கும் நிர்மலா சீதாராமன்..!


வீட்டுக் கடன்
கூடுதல் வரி சலுகைகளைப் பெற 2020 மார்ச் மாதத்திற்கு முன்பாக, வீட்டுக் கடனை வாங்கிக் கொள்ளுவது நல்லது. உங்கள் வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற வீட்டுக் கடனை வாங்க நீங்கள் திட்டமிட்டால், மார்ச் 2020 க்கு முன்னர் அவ்வாறு செய்து விடுங்கள். 2019-20 நிதியாண்டில் குறைந்த விலையில் வீடு வாங்க வீட்டுக் கடனை எடுத்தால், உங்களுக்கு, கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக பிரிவு 80EEA இன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு நன்மை கிடைக்கும். 80EEA வரி சலுகை 2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரை அனுமதிக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, மேலும் நீங்கள் மற்றொரு குடியிருப்பு சொத்தை வைத்திருக்கக்கூடாது. சொத்தின் அளவு, சொத்தின் மதிப்பு (சொத்தின் முத்திரை வரி மதிப்பு ரூ .45 லட்சத்தை தாண்டக்கூடாது) தொடர்பான நிபந்தனைகளும் அடங்கும். ஒரு வருடத்தில் ரூ .1.5 லட்சம் வரை, வீட்டுக் கடன் அசல் திருப்பிச் செலுத்துவதற்கு, பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு நன்மை உள்ளது.


எனவே, நீங்கள் உங்கள் முதல், வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், பிரிவு 80EEA இன் கீழ் இந்த கூடுதல் நீண்ட கால வரி சலுகையைப் பெற 2020 மார்ச் 31 க்கு முன்னர் வீட்டுக் கடனை பெறுவதை பரிசீலிக்கலாம்.


பங்கு முதலீடுகள் குறித்து வழக்கமான எல்.டி.சி.ஜி.
ஒரு நிதியாண்டில் பங்கு முதலீடுகளில் உங்கள் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (எல்.டி.சி.ஜி) ரூ .1 லட்சத்தை தாண்டினால், அந்த தொகை 10% வருமான வரிக்கு உட்பட்டது. இந்த வரியைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் ஆதாயங்கள் இந்த வரிவிதிப்பு வரம்பை மீறாத அளவிற்கு மற்றும் அடுத்த நாள் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை மீண்டும் வாங்கிக் கொள்வது ஆகும்.


பெற்றோருக்கான மருத்துவ செலவுகளை வரி விலக்கு எனக் கோருங்கள்
மூத்த குடிமக்களுக்கான, புதிய சுகாதார காப்பீட்டு பாலிசியை வாங்குவது, அதிக பணம் செலவாகக்கூடிய ஒரு விஷயம். ஆனால், ஒருவேளை உங்கள் பெற்றோருக்கு சுகாதார காப்பீட்டு பாலிசி இல்லையென்றால், 80டி பிரிவின் கீழ் நீங்கள் முழுமையாக வரி விலக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். இதற்கு மாற்றாக, உங்கள் பெற்றோருக்கு குறிப்பிட்ட நிதியாண்டில், ஏதாவது மருத்துவ செலவு செய்திருந்தால், அந்த பில்களை ஆதாரமாக சமர்ப்பித்து, ரூ .50,000 வரை வரி விலக்கு சலுகையை நீங்கள் பெற முடியும்.


வரிகளைச் சேமிக்க நீண்டகால ப்ரீமியம் செலுத்துவதைத் தவிர்க்கவும்
வரி சேமிப்பு விஷயங்களில், முதலீடு செய்யும் போது, ​​மிக நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படும் முதலீடுகளைத் தவிர்க்கவும். எடுத்துக்காட்டாக, நம்மில் பலர் பாரம்பரிய காப்பீட்டு பாலிசிகளை, கடைசி நிமிட வரி சேமிப்பு நடவடிக்கையாக நம்பி முதலீடு செய்கிறோம். சில மாதங்களுக்குப் பிறகு, சில காரணங்களால் நீங்கள் பாலிசிலியைத் தொடர விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம், அப்போது, பாலிசியிலிருந்து, வெளியேறுவது குறிப்பிடத்தக்க நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்த நேரத்தில் விலகுவது கடினம். எனவே, வரி சேமிப்புக்கான, முதலீடு செய்வதற்கான அவசரத்தில் இருக்கும்போது, ​​உங்கள் நிதியை இழக்கும் வகையிலான முதலீடுகளை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக ஒரு நிதி ஆலோசகரை அணுகவும் நீங்கள் தயங்க வேண்டாம்.

வாய்ப்பு..! எப்படி..?

INCOME TAX ONLINE CALCULATOR SIMPLE METHORD AND EASY METHORD


 online income tax salary calculation method

மாத சம்பளக்காரர்களுக்கு வருமான வரி படிவம் இணையம் வாயிலாக பதிவு செய்து பதிவிறக்கம் செய்து அச்சு எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது


Click to start online calculator


DEDUCTION OF TAX AT SOURCE￾INCOME-TAX DEDUCTION FROM SALARIES
UNDER SECTION 192 OF THE INCOME-TAX ACT, 1961

CIRCULAR NO 01 /2019


Click to download
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.1 லட்சம் மின்சார கட்டணம் செலுத்தியவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது.
புதுடெல்லி, 

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்களை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் வருமான வரித்துறை வெளியிடுவது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக, கடந்த 3-ந் தேதி, 2020-2021 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

அவற்றில் ஒன்று ஐ.டி.ஆர்.-1 சஹாஜ் படிவம். ரூ.50 லட்சம்வரை ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் இதில் கணக்கு தாக்கல் செய்யலாம். மற்றொன்று, ஐ.டி.ஆர்.-4 சுகம் படிவம். இது, தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், ரூ.50 லட்சம்வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் ஆகியோர் பயன்படுத்தக்கூடியது.

அத்துடன், இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் 2 பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாக வருமான வரித்துறையின் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, 2 அல்லது அதற்கு மேற்பட்டோரை பங்குதாரர்களாக கொண்டு சொந்த வீடு வைத்திருக்கும் தனிநபர்கள் மேற்கண்ட 2 படிவங்களையும் பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது. உரிய நேரத்தில், அந்த படிவம் வெளியிடப்படும்.

2-வது மாற்றம், ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக்கணக்கில் போட்டு வைத்திருக்கும் தனிநபர்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவழித்தவர்கள், மின்சார கட்டணம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கட்டியவர்கள் ஆகியோரும் ஐ.டி.ஆர்.-1 படிவத்தை பயன்படுத்த முடியாது.

அறிமுகப்படுத்தப்பட உள்ள தனி படிவத்திலேயே அவர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

Thanks web site

How a Tournament Works, Part 3 - Direct Eliminations - SWORDS FENCING STUDIO ...