Posts

Showing posts from September, 2019

ஆதார் - பான் இணைக்க வரும் 30ம் தேதி கடைசி

புதுடெல்லி: ஆதாரையும் பான் எண்ணையம் இணைக்க கெடு, வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. நிதி மசோதா திருத்தங்களின்படி, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. கடைசியாக, நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பான் - ஆதார் இணைப்பு அவகாசம் செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்டது. இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. கெடு முடிய சில நாட்களே உள்ளன. ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண்ணை பயன்படுத்த முடியாது. எனவே, அக்டோபர் 1 முதல் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இயலாமல் போகலாம். ஆனால், இதுகுறித்த அறிவிப்பு அல்லது வரையறை எதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. இணைப்பது எப்படி?: வருமான வரி இணையதளத்தில் இடதுபுறம். 'Quick Links' என்பதை கிளிக் செய்து, 'Link Aadhaar' என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் பான் எண், ஆதார் எண், பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்த பிறகு ஒரு முறை பாஸ்வேர்டு மொபைல் எண்ணுக்கு வரும். அதை உள்ளீடு செய்து பான் - ஆதார் இணைக்கலாம். இதையடுத்து, உங்கள்

உங்களுக்கு விரைவில் வருமான வரியினரிடம் இருந்து அழைப்பு வரலாம்..! ஆணையர் எச்சரிக்கை..!

Image
வருமான வரி செலுத்தாமல் இருப்பது மற்றும் கணக்கில் காட்டாத வருமானம் போன்றவைகளால் இனி எந்த லாபமும் இருக்கப் போவதில்லை என வருமான வரித் துறையினர் சொல்கிறார்கள். காரணம் வருமான வரித்துறையினர், அனைத்து குடிமக்களின் விவரங்கள் அடங்கிய ஒரு பெரிய டேட்டா பேஸையே அமைத்து தரவுகளை திரட்டி வருகிறார்களாம். "கூடிய விரைவில், முறையாக வரி செலுத்தாதவர்கள், தங்களின் ஒவ்வொரு முதலீட்டையும், வருமான வரித் துறையினரிடம் சமர்பிக்காத விவரங்களைப் பற்றியும் விளக்கிச் சொல்ல அவர்கள் அழைக்கப்படுவார்கள்" என்று உத்தரபிரதேசம் (மேற்கு) மற்றும் உத்தரகண்ட் பிராந்தியத்தின் வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையர் பி.கே.குப்தா சொல்லி இருக்கிறார். Income Tax Notice: you may get a call from IT dept வருமான வரித் துறையினரின் வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் விதிகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தில், அவர் பேசிய போது தான் இந்த எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். "நட்பு மற்றும் தொழில்முறை நெறிமுறைகளுக்கு இடையே மிக மெல்லிய வேறுபாடு இருப்பதை வரி வல்லுநர்கள் மற்றும் வரி செலுத்துப

வருமானவரித்துறை TDS தொடர்பான 7 அதிரடி மாற்றங்கள்! செப். 1 முதல் அமலுக்கு வருகிறது

. அசையா சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான சொத்தின் மதிப்புக்கு மட்டுமே டி.டி.எஸ் செய்யப்படும் என்றவிதிமுறையில் இருந்து வந்தது. ஆனால்,வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு சொத்தை வாங்கும்போது, சொத்தின் மதிப்புடன், கிளப் ஹவுஸ்,கார் பார்க்கிங், மின்சாரம், நீர் வசதி கட்டணம், மற்றும் ஆடம்பர தேவைகளுக்கான வசதிகளுக்குசேர்த்து கட்டும்தொகையோடு அதற்கும்டி.டி.எஸ்-யை செலுத்த வேண்டும். 2. ஓர் நிதியாண்டில் ஒருவங்கிக் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்-க்கு மேல் பணத்தை எடுக்கும் பட்சத்தில், அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை குறைக்கவும்இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.செப்டம்பர் 1 முதல், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ .50 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தும் தனிநபர்கள் மற்றும் HUF எனப்படும் இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் 5% டி.டி.எஸ் செலுத்த வேண்டும். வீடு புதுப்பித்தல், திருமண விழாக்களின் போது ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த நபருக