வருமான வரியை சேமிக்க 4 நச் டிப்ஸ்

Income tax முதலீட்டு ப்ரூப் சமர்ப்பிக்க நெருங்கியது காலக்கெடு..

 நடப்பு நிதியாண்டுக்கான, முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க ரெடியாகிவிட்டீர்கள். அதேபோல, அடுத்த நிதியாண்டுக்கான சேமிப்புகளுக்கும் தயாராக வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.


அதிக வருமான வரி செலுத்துதல் என்பதற்கு, உங்களின், மோசமான நிதி மேலாண்மைதான் காரணம். திறமையற்ற வரி-திட்டமிடல், வீட்டுக்கான வருமானத்தை மோசமாக குறைத்துவிடும் என்பது உங்களுக்கே தெரியும்.

எனவே, ஆண்டின் தொடக்கத்தில் ஒரு தெளிவான வரி சேமிப்புத் திட்டத்தை கையில் எடுங்கள். FY2019-20 இன் முடிவை நெருங்கும்போது, வரி சேமிப்பு திட்டங்களை கையில் ரெடியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

விரைவில் ஒரு குட் நியூஸ் சொல்லுவேன்..! சஸ்பென்ஸ் வைக்கும் நிர்மலா சீதாராமன்..!


வீட்டுக் கடன்
கூடுதல் வரி சலுகைகளைப் பெற 2020 மார்ச் மாதத்திற்கு முன்பாக, வீட்டுக் கடனை வாங்கிக் கொள்ளுவது நல்லது. உங்கள் வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற வீட்டுக் கடனை வாங்க நீங்கள் திட்டமிட்டால், மார்ச் 2020 க்கு முன்னர் அவ்வாறு செய்து விடுங்கள். 2019-20 நிதியாண்டில் குறைந்த விலையில் வீடு வாங்க வீட்டுக் கடனை எடுத்தால், உங்களுக்கு, கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக பிரிவு 80EEA இன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு நன்மை கிடைக்கும். 80EEA வரி சலுகை 2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரை அனுமதிக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, மேலும் நீங்கள் மற்றொரு குடியிருப்பு சொத்தை வைத்திருக்கக்கூடாது. சொத்தின் அளவு, சொத்தின் மதிப்பு (சொத்தின் முத்திரை வரி மதிப்பு ரூ .45 லட்சத்தை தாண்டக்கூடாது) தொடர்பான நிபந்தனைகளும் அடங்கும். ஒரு வருடத்தில் ரூ .1.5 லட்சம் வரை, வீட்டுக் கடன் அசல் திருப்பிச் செலுத்துவதற்கு, பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு நன்மை உள்ளது.


எனவே, நீங்கள் உங்கள் முதல், வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், பிரிவு 80EEA இன் கீழ் இந்த கூடுதல் நீண்ட கால வரி சலுகையைப் பெற 2020 மார்ச் 31 க்கு முன்னர் வீட்டுக் கடனை பெறுவதை பரிசீலிக்கலாம்.


பங்கு முதலீடுகள் குறித்து வழக்கமான எல்.டி.சி.ஜி.
ஒரு நிதியாண்டில் பங்கு முதலீடுகளில் உங்கள் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (எல்.டி.சி.ஜி) ரூ .1 லட்சத்தை தாண்டினால், அந்த தொகை 10% வருமான வரிக்கு உட்பட்டது. இந்த வரியைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் ஆதாயங்கள் இந்த வரிவிதிப்பு வரம்பை மீறாத அளவிற்கு மற்றும் அடுத்த நாள் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை மீண்டும் வாங்கிக் கொள்வது ஆகும்.


பெற்றோருக்கான மருத்துவ செலவுகளை வரி விலக்கு எனக் கோருங்கள்
மூத்த குடிமக்களுக்கான, புதிய சுகாதார காப்பீட்டு பாலிசியை வாங்குவது, அதிக பணம் செலவாகக்கூடிய ஒரு விஷயம். ஆனால், ஒருவேளை உங்கள் பெற்றோருக்கு சுகாதார காப்பீட்டு பாலிசி இல்லையென்றால், 80டி பிரிவின் கீழ் நீங்கள் முழுமையாக வரி விலக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். இதற்கு மாற்றாக, உங்கள் பெற்றோருக்கு குறிப்பிட்ட நிதியாண்டில், ஏதாவது மருத்துவ செலவு செய்திருந்தால், அந்த பில்களை ஆதாரமாக சமர்ப்பித்து, ரூ .50,000 வரை வரி விலக்கு சலுகையை நீங்கள் பெற முடியும்.


வரிகளைச் சேமிக்க நீண்டகால ப்ரீமியம் செலுத்துவதைத் தவிர்க்கவும்
வரி சேமிப்பு விஷயங்களில், முதலீடு செய்யும் போது, ​​மிக நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படும் முதலீடுகளைத் தவிர்க்கவும். எடுத்துக்காட்டாக, நம்மில் பலர் பாரம்பரிய காப்பீட்டு பாலிசிகளை, கடைசி நிமிட வரி சேமிப்பு நடவடிக்கையாக நம்பி முதலீடு செய்கிறோம். சில மாதங்களுக்குப் பிறகு, சில காரணங்களால் நீங்கள் பாலிசிலியைத் தொடர விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம், அப்போது, பாலிசியிலிருந்து, வெளியேறுவது குறிப்பிடத்தக்க நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்த நேரத்தில் விலகுவது கடினம். எனவே, வரி சேமிப்புக்கான, முதலீடு செய்வதற்கான அவசரத்தில் இருக்கும்போது, ​​உங்கள் நிதியை இழக்கும் வகையிலான முதலீடுகளை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக ஒரு நிதி ஆலோசகரை அணுகவும் நீங்கள் தயங்க வேண்டாம்.

வாய்ப்பு..! எப்படி..?

Comments

Popular posts from this blog

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE & PDF FORM FY 2023-24 AY 2024-25 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் 2024-2025 INCOME TAX SOFTWARE 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS