Posts

Showing posts from August, 2022

மின் சரிபார்ப்பு அல்லது ஐடிஆர்-வி சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு இப்போது தேதியிலிருந்து 30 நாட்களாக இருக்கும் என்று முடிவு

 30 நாட்களாகக் குறைக்கப் பட்டுள்ள ஐடிஆர் சரிபார்ப்பு  ஐடிஆர்-வியின் மின் சரிபார்ப்பு அல்லது நகல் சமர்ப்பித்தல் , ஆகஸ்ட் 1ந் தேதி முதல், தற்போதைய 120 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைக்கப் பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவில் மாற்றம் செய்து ஜூலை 29-ம் தேதி வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டது. “இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் தேதியில் அல்லது அதற்குப் பிறகு எந்தவொரு மின்னணு பரிமாற்றத் தகவலுக்கும், மின் சரிபார்ப்பு அல்லது ஐடிஆர்-வி சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு இப்போது தேதியிலிருந்து 30 நாட்களாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ” என்று வருமான வரித்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் அனுப்பப்பட்டால் ஐடிஆர் அல்லது நகல் ஐடிஆர்-வியின் மின் சரிபார்ப்பு 30 நாட்களுக்கு மேலும், ரிட்டர்ன் தாமதமாகவோ அல்லது குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டதாகவோ கருதப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்த பிறகு, ITR ஐ மின் சரிபார்ப்பது அல்லது ITR-V ஐ தபால் மூலம