உங்களுக்கு விரைவில் வருமான வரியினரிடம் இருந்து அழைப்பு வரலாம்..! ஆணையர் எச்சரிக்கை..!
வருமான வரி செலுத்தாமல் இருப்பது மற்றும் கணக்கில் காட்டாத வருமானம் போன்றவைகளால் இனி எந்த லாபமும் இருக்கப் போவதில்லை என வருமான வரித் துறையினர் சொல்கிறார்கள். காரணம் வருமான வரித்துறையினர், அனைத்து குடிமக்களின் விவரங்கள் அடங்கிய ஒரு பெரிய டேட்டா பேஸையே அமைத்து தரவுகளை திரட்டி வருகிறார்களாம்.
"கூடிய விரைவில், முறையாக வரி செலுத்தாதவர்கள், தங்களின் ஒவ்வொரு முதலீட்டையும், வருமான வரித் துறையினரிடம் சமர்பிக்காத விவரங்களைப் பற்றியும் விளக்கிச் சொல்ல அவர்கள் அழைக்கப்படுவார்கள்" என்று உத்தரபிரதேசம் (மேற்கு) மற்றும் உத்தரகண்ட் பிராந்தியத்தின் வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையர் பி.கே.குப்தா சொல்லி இருக்கிறார்.
Income Tax Notice: you may get a call from IT dept
வருமான வரித் துறையினரின் வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் விதிகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தில், அவர் பேசிய போது தான் இந்த எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
"நட்பு மற்றும் தொழில்முறை நெறிமுறைகளுக்கு இடையே மிக மெல்லிய வேறுபாடு இருப்பதை வரி வல்லுநர்கள் மற்றும் வரி செலுத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் எனத் தெளிவாகக் உங்களுக்குத் தெரியும் எதையும் செய்ய வேண்டாம். அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் எங்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறீர்கள் என்றால், எங்களோடு தொழில் சார் நெறிமுறைகள் உடன் பழக வேண்டும்"என்றார் குப்தா.
எந்த அப்பாவியும் தண்டிக்கப்படாமல் இருப்பதை வருமான வரி அதிகாரிகள் உறுதி செய்வார்கள். "ஆனால் குடிமக்கள் உண்மைகளை சிதைக்கவோ அல்லது தவறான ஆதாரங்களை உருவாக்கவோ கூடாது" என்று சொல்லி இருக்கிறார். நடப்பு நிதியாண்டில் உத்தர பிரதேசம் (மேற்கு) மற்றும் உத்தரகண்ட் ஆகிய பிராந்தியங்களுக்கான வரி வசூல் இலக்கு 35,979 கோடி ரூபாயாக நிர்ணயித்து இருக்கிறார்கள்.
ரூ. 1,500 to ரூ. 40,000..! வாகன பதிவுக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தத் திட்டம்..!
கடந்த ஆண்டு, 39 லட்சம் வரி செலுத்துவோரிடம் இருந்து, 28,855 கோடி ரூபாய் வரியை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நம் வருமான வரி அதிகாரிகள், நிர்ணயித்த இலக்கை விட சுமார் 250 கோடி ரூபாய் கூடுதலாக வசூலித்தனர். ஆக முந்தைய ஆண்டை விட சுமார் 24 சதவிகிதம் கூடுதலாக இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
"இந்த ஆண்டு, உத்தரப் பிரதேசம் (மேற்கு) மற்றும் உத்தராகண்ட் பிராந்தியங்களில் மேலும் 6.6 லட்சம் வரி செலுத்துவோரை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லி இருக்கிறார் முதன்மை ஆணையர் குப்தா.
Comments
Post a Comment