வருமானவரித்துறை TDS தொடர்பான 7 அதிரடி மாற்றங்கள்! செப். 1 முதல் அமலுக்கு வருகிறது


. அசையா சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான சொத்தின் மதிப்புக்கு மட்டுமே டி.டி.எஸ் செய்யப்படும் என்றவிதிமுறையில் இருந்து வந்தது. ஆனால்,வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு சொத்தை வாங்கும்போது, சொத்தின் மதிப்புடன், கிளப் ஹவுஸ்,கார் பார்க்கிங், மின்சாரம், நீர் வசதி கட்டணம், மற்றும் ஆடம்பர தேவைகளுக்கான வசதிகளுக்குசேர்த்து கட்டும்தொகையோடு அதற்கும்டி.டி.எஸ்-யை செலுத்த வேண்டும்.

2. ஓர் நிதியாண்டில் ஒருவங்கிக் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்-க்கு மேல் பணத்தை எடுக்கும் பட்சத்தில், அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை குறைக்கவும்இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.செப்டம்பர் 1 முதல், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ .50 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தும் தனிநபர்கள் மற்றும் HUF எனப்படும் இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் 5% டி.டி.எஸ் செலுத்த வேண்டும்.

வீடு புதுப்பித்தல், திருமண விழாக்களின் போது ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த நபருக்கோ நிறுவனத்திற்கோ, 50 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்த நேர்ந்தால் அதில்,டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

4.நீங்கள் பெற்ற ஆயுள் காப்பீட்டின் முதிர்வு தொகைக்குவரி விதிக்கப்படுமானால், நிகர வருமானப் பகுதியில் இருந்து 5%டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும்.

5. செப்டம்பர் 1 முதல், வங்கிகள் மற்றும் எஃப்ஐக்கள் சிறிய பரிவர்த்தனைகளை கூட வரித் துறைக்கு தெரிவிக்கும்படி கேட்கலாம், இதன் மூலம் உங்கள் வருமானவரிதாக்கலை சரிபார்க்க இதனை பயன்படுத்தலாம்.

6. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி,குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ஆதார் உடன் பான் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் எண் செயல்பாடற்றதாக கருதப்படும். எனினும் அது முடக்கப்பட்டதாக கருத முடியாது. இவ்வகை பான் என் உடையவர்கள் அதை மீண்டும் புதுப்பிக்க என்ன வழி என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

7.பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப பான் அல்லது ஆதாரை பயன்படுத்தலாம்.குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டை மேற்கோள் காட்ட முடியும்.

Comments

Popular posts from this blog

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE & PDF FORM FY 2023-24 AY 2024-25 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் 2024-2025 INCOME TAX SOFTWARE 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES