ஜூன் 15 வரை வருமான வரி ITR தாக்கல் செய்ய வேண்டாம்? சம்பளதாரர்களுக்கு அறிவுறுத்தும் சி.ஏக்கள்.. ஏன்? எதற்கு?.
வருமான வரி தாக்கல் செய்யும் சம்பளதாரர்களுக்கு பல்வேறு சி.ஏக்கள் தரப்பில் இருந்து முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான E Filing PORTAL இன்னும் திறக்கப்படாததால் மக்கள் தவித்து வருகிறார்கள். கடந்தாண்டு ஏப்.16ம் தேதியே போர்டல் திறக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு மே.27ம் தேதி ஆகியும் திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்து உள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. e filing திறக்கப்படவில்லை என்று முதல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பலரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை வெளியிட்டு உள்ளது. பார்ம் 1 மற்றும் 4ஐ வெளியிட்டு உள்ளது. ஆனால் எல்லோருக்கும் இந்த பார்ம் இன்னும் வெளியாகவில்லை என்பதுதான் சிக்கலே
ITR படிவங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வருமான வரித் துறை வருமான வரி வருமானத்தை சமர்ப்பிக்கத் தேவையான ஆன்லைன் தாக்கல் பயன்பாடுகளை இன்னும் வெளியிடவில்லை. அதாவது e filing இன்னும் திறக்கவில்லை.
"வரும் தேர்தலில் ஓட்டுக்கு வண்டி வண்டியாக காசை கொட்டுவாங்க" - TVK VIJAY SPEECH | Oneindia Tamil
எச்சரிக்கை
இப்படிப்பட்ட நிலையில்தான் வருமான வரி தாக்கல் செய்யும் சம்பளதாரர்களுக்கு பல்வேறு சி.ஏக்கள் தரப்பில் இருந்து முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்வதற்கு ஜூன் 15 வரை காத்திருக்கும்படி சம்பளதாரர்களுக்கு சி.ஏக்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்வதற்கு ஜூன் 15, 2025 வரை காத்திருக்க வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்படுவதற்கான முக்கிய சில காரணங்கள் உள்ளன.
ITR படிவங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வருமான வரித் துறை வருமான வரி வருமானத்தை சமர்ப்பிக்கத் தேவையான ஆன்லைன் தாக்கல் பயன்பாடுகளை இன்னும் வெளியிடவில்லை. அதாவது e filing இன்னும் திறக்கவில்லை.
இது போக TDS சான்றிதழ்களுக்காகக் காத்திருக்க வேண்டும். ITR தாக்கல் செய்தால், கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதற்கு மூலத்தில் வரி கழிக்கப்படும் (TDS) சான்றிதழ்கள் பெற வேண்டும். மே 31க்கு பிறகே அதற்கு விண்ணப்பிக்க முடியும். அது வருவதற்கு எப்படியும் ஜூன் 2ம் வாரம் ஆகிவிடும்.
இதனால் சம்பளம் வாங்கும் நபர்களுக்கான படிவம் 16, மற்றவர்களுக்கு படிவம் 16A போன்ற மூலத்தில் வரி கழிக்கப்படும் (TDS) சான்றிதழ்கள் பொதுவாக ஜூன் 15 ஆம் தேதிதான் வழங்கப்படும். இந்த ஆவணங்களைப் பெறுவதற்கு முன்பு ITR தாக்கல் செய்வது உங்கள் வருமானத்தில் முழுமையற்ற அல்லது தவறான தகவல்களை ஏற்படுத்தக்கூடும். பிழைகள் ஏற்படவும் காரணமாக அமையும்.
உங்கள் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி வரவுகள் தொடர்பான வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் படிவம் 26AS ஆகியவை பொதுவாக ஜூன் நடுப்பகுதியில் முழுமையாக புதுப்பிக்கப்படும். இந்த அறிக்கைகள் முழுமையடைவதற்கு முன்பு தாக்கல் செய்வது முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும். ITRல் பிழைகள் ஏற்படவும் காரணமாக அமையும்.
Comments
Post a Comment