ஆதார்-பான் இணைக்க கடைசி நாள் அறிவிப்பு: வருமானவரி இல்லை என்றாலும் 20 % வரி கட்டவேண்டும்
இன்னும் ஆதார் கார்டை பான் அட்டையுடன் இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31க்குள் கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடைசி நாளை அறிவித்துள்ளது.
ஆதார் மற்றும் பான் அட்டைகள் ஒவ்வொரு இந்தியரின் முக்கிய ஆவணங்களாக இருக்கின்றன. இவை வங்கி பரிவர்த்தனைகள், வருமான வரித்துறை வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, ஆதார் மற்றும் பானை இணைப்பது மிக முக்கியம்.
மத்திய அரசு நாடு முழுவதும் அனைத்து வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைப்பை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரை வழங்கி வந்தது. அதேபோல், ஆதார் மற்றும் பான் இணைப்பும் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்னும் மீண்டும் கால அவகாசம் வழங்காமல், டிசம்பர் 31க்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும் எனவும், இதற்கு பிறகு ஆதார் இணைக்காதவர்களுக்கு வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் பிற சேவைகளில் தடைகள் ஏற்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இதைப் புறக்கணிக்காமல் உடனடியாகவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆதார்-பான் இணைப்பை நிச்சயமாகச் செய்துகொள்ளுங்கள்.
Comments
Post a Comment