2018-19 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அபராதத்துடன் தாக்கல் செய்ய செப். 30 கடைசி
SEPTEMBER 24, 2020
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் கணக்கு தாக்கல் செய்ய வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கடந்த 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.
அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிகழாண்டில் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
Comments
Post a Comment