மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வருமான வரிச்சலுகை
இந்தியாவின் வருமான வரிச் சட்டம் மூத்த குடிமக்களுக்கும், மிக மூத்த குடிமக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது. 60 வயது முதல் 80 வயது வரையிலான நபர் 'மூத்த குடிமகன்' என்றும் 80 வயதுக்கு மேற்பட்ட நபர் 'மிகவும் மூத்த குடிமகன்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். மருத்துவ செலவுகள் மற்றும் வைப்புத்தொகைகளில் கிடைக்கும் வட்டி போன்றவற்றின் அடிப்படையில் மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு வருமான வரி சலுகைகள் அளிக்கப்படுகின்றன. 2020-21 நிதியாண்டில், ஒரு மூத்த குடிமகனுகான வருமான வரி விலக்கு வரம்பு, ₹3,00,000. மூத்த குடிமக்கள் அல்லாத சாதாரண பொது மக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ₹2,50,000. சாதாரணமாக வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது, ₹ 50,000 என்ற அளவிற்கு கூடுதலாக வருமான வரி விலக்கு கிடைக்கிறது. மிகவும் மூத்த குடிமகனுக்கு, மிக அதிக அளவாக, ₹5,00,000 வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. முன்கூட்டியே வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பிரிவு 208-ன் கீழ், ஒரு ஆண்டுக்கான வரி ₹ 10,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் ஒவ்வொரு நபரும் தனது வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இருப்ப...