ITR COPY பெங்களுர் அனுப்ப மறந்தவர்கள் உடனே இதை பண்ணுங்க!
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது.
Gold Rate in Chennai: தண்ணி காட்டிய தங்கம்! விலைச் சரிவு தொடருமா?
வழக்கமாக, நிதியாண்டுக்கான வரி ரிட்டன்களுக்கான கோரிக்கைப் படிவங்கள் அவர்களின் கையொப்பத்துடன் பெங்களூருவில் உள்ள மத்திய செயல்பாட்டு மையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கு அவை சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது மின்னணு மூலமாக சரிபார்ப்புக்கு அனுப்பப்படுவதாக இருந்தால் வரி செலுத்துவோரின் ஆதார் ஓடிபி, நெட் பேங்கிங், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டவை மூலமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு சரிபார்ப்பு செய்யப்பட்டுவிட்டால் அந்த வரி செலுத்துவோர் தான் வழங்கிய விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்று உறுதியளிக்கப்படுகிறது.
விலை உயர்வால் வந்த சோதனை... பணவீக்கம் அதிகரிப்பு!
தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் வரி செலுத்துவோருக்கு இந்த அறிவிப்பை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு நவம்பர் 30ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வரி தணிக்கைக்கான காலக்கெடு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment