அரசு ஊழியர்கள் வருமான வரி சார்ந்த வினா மற்றும் பதில்
அரசு ஊழியர் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே கட்ட வேண்டுமா? அரசு ஊழியர்கள் தாங்கள் செலுத்தும் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் தனியாக வங்கியிலோ அல்லது வேறு வழியிலோ தனது சொந்த கணக்கு எண்ணில் கட்ட எவரும் நிர்ப்பந்திக்கக் கூடாது. அரசு ஊழியர் தனது வருமான வரியை அந்த வருடத்தின் கடைசியில் மொத்தமாக சம்பளத்தில் பிடித்தம் செய்ய இயலுமா? அரசு ஊழியர் தனது வருமான வரியை முதல் காலாண்டில் ஒரு சராசரி உத்தேச மதிப்பீடு செய்து தனது வரியை கட்டாயம் பிரதி மாதம் சராசரி எண்ணிக்கையில் மற்றும் தொகையை பிடித்தம் செய்தல் வேண்டும். அரசு அதிகாரி சம்பளம் பெற்று விழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 கண்டிப்பாக வழங்க வேண்டுமா? தங்களால் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் தொகை அரசு அலுவலக அதிகாரி மூலம் டிடிஎஸ் (TDS) பதிவுசெய்து அரசு ஊழியருக்கு படிவம் 16 (form 16) கண்டிப்பாக தருதல் வேண்டும். அரசு குறிப்பேடு களிலேயே வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரி மற்றும் சம்பளம் பெற்று வழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 கொடுக்காத போது தங்களால் செய்யப்படுகின்ற வரி தாக்கல் சரியாக வ...