கிரடிட் கார்டுகளுக்கான EMI  நிலை என்ன ?

மாத சம்பளகார்களின் கடன் நிலைமை என்ன ? எப்போது கட்ட வேண்டும்? 

EMI மூலம் செலுத்தும் வீட்டு கடன்,வாகன கடன் ,பர்சனல் கடன் போன்றவற்றின் நிலை என்ன ?

வங்கி அலுவலரின்  தெளிவான  விளக்கங்கள்
  



நண்பர்களுக்கு வணக்கம்.இன்று காலை ஆசிரியர் தோழர்.முத்துக்குமரன் வங்கி கடன் தொடர்பான  சந்தேகங்களை கேட்டார்.நானும் எனக்கு தெரியவில்லை என்று சொல்லி, அறந்தாங்கியில் வங்கி பணியில்உள்ள நண்பர் காசி விசுவநாதன் அவர்களிடம் கேட்டபோது ,வங்கி கடன் தொடர்பாக காசி விசுவநாதன் கூறிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


*🔥🔥வீட்டுக் கடன், வாகனக் கடன் ,பர்சனல் லோன் கடன்களுக்கான EMI  கட்டும் தொகையானது மூன்று மாதங்களுக்கு தள்ளி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனை கட்டவே வேண்டாம் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. மூன்று மாதம் தள்ளி  கட்ட சொல்லி உள்ளது. 

அது எப்படி ? விரிவாக காண்போம் :


                      நாம்  சுமாராக 120 மாதங்கள் கடன் கட்டுகிறோம் என்றால் அதனை மூன்று மாதங்கள் தள்ளி கொடுத்துள்ளது .123 மாதங்கள் கட்டிக்கொள்ளலாம். ஏப்ரல், மே, ஜூன் - 3 மாதங்களுக்கும் உள்ள தொகையை கடன் தொகை முடியும் மாத கடைசிக்கு பிறகு உள்ள மூன்று மாதங்களில் கட்டிக்கொள்ளலாம். உதாரணமாக 120 மாதங்கள் கட்ட வேண்டுமென்றால் 120 மாதங்கள் கட்டி முடித்துவிட்டு 121, 12,2 123 ஆவது மாதங்களாக ஏப்ரல், மே ,ஜூன் 2020ம் ஆண்டுக்கான தொகைகளை கட்டிக்கொள்ளலாம். 2020 ஜூலையில் ஜூலை மாதத்திற்கு உரிய தொகையை கட்டினாலே போதும்.சேர்த்து கட்ட  வேண்டிய அவசியமில்லை. எனவே இது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படவில்லை. தள்ளி மட்டுமே வைத்துள்ளனர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக் கடனுக்கான வட்டி தொகையும் குறைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கான முடிவுகளை அந்தந்த வங்கிகளே முடிவு செய்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.*

மாத சம்பளக்காரர்களின் நிலை என்ன ? 

*மாத சம்பள காரர்கள் இசிஎஸ் மூலமாக பணம் சென்று கொண்டிருந்தால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் கண்டிப்பாக ஏப்ரல்  -2020 மாதத்திற்கு உரிய தொகையும் எடுத்துக்கொள்ளப்படும்.ஏப்ரல் ,மே ,ஜூன் 2020 மாத கடன் தொகைகள் அந்தந்த மாதங்களில் எடுத்துக்கொள்ளப்படும். வங்கி கணக்கில் பணம்  இல்லாவிடில் மட்டுமே ஏப்ரல் ,மே, ஜூன் 2020 மாதத்திற்கான கடன் தள்ளி கொடுக்கப்படும்.  ECS மூலம் கடன் வங்கியில் பணம் எடுக்கும்போது பணம்  வங்கியில் இருப்பு இருந்தால் பணம் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த 3 மாதங்களும் பணம் இல்லை என்றால் அதற்குரிய அதிக அபராதங்களும் எதுவும் போட மாட்டார்கள். இதனை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது.*

கிரெடிட் கார்டு கடன் நிலைமை என்ன ? 

 கிரெடிட் கார்டுக்கான EMI கட்டும் பணம் தள்ளி கட்டுவதற்கான தகவல் மத்திய அரசின் உத்தரவில்இல்லை.எனவே கிரெடிட் கார்டு மூலம் பெற்றுள்ள கடன்களுக்கும், இந்த உத்தரவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.எனவே கிரெடிட் கார்டுகளுக்கான கடன் தள்ளிப்போகமாட்டாது.


வங்கியில் பணம் இல்லை என்றால் எப்படி ? 



 பணம் இருந்தால் எடுத்துக்கொள்ளும்.இல்லாவிடில் பணம் எடுத்துக்கொள்ளாது.கடனை அரசு தள்ளுபடி செய்யவில்லை.மத்தியஅரசு அறிவித்துள்ளது வாகன கடன்,வீடு கடன்,பர்சனல் லோன் மூன்றுக்கு மட்டுமே மூன்று மாதம் தவணையை தள்ளி கொடுத்துள்ளது.வங்கி கணக்கில் பணம் இல்லாதவர்களுக்கான தள்ளி வைப்புதான் அது.உதாரணமாக ,நான் இந்த மாதம் வாங்கிய சம்பளம் முழுவதும் எடுத்து செலவு செய்து விட்டேன்.வங்கியில் பணமே இல்லை என்ற நிலையில் உங்களுக்கான அபராதம் விதிப்பில் இருந்து தவிர்ப்பு கிடைக்கும்.கடன் பணம் கட்ட வேண்டிய காலம் 3 மாதம் தள்ளி போகும்.இந்த குறிப்பிட்ட மூன்று மாதங்கள் பணம் கட்ட வில்லை என்றால் கடன் பெற்றவருக்கு வங்கி போன் செய்தோ,நேரிலோ தொந்தரவு கொடுக்க கூடாது.மேலும் கடன் கடன் கட்டாதவர் என்று சிபிலில் பெயரை சேர்க்க கூடாது.இந்த தகவல்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.இவரு காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

தகவல் பகிர்வு :
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653 

Comments

Popular posts from this blog

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE & PDF FORM FY 2023-24 AY 2024-25 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் 2024-2025 INCOME TAX SOFTWARE 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS