
கிரடிட் கார்டுகளுக்கான EMI நிலை என்ன ? மாத சம்பளகார்களின் கடன் நிலைமை என்ன ? எப்போது கட்ட வேண்டும்? EMI மூலம் செலுத்தும் வீட்டு கடன்,வாகன கடன் ,பர்சனல் கடன் போன்றவற்றின் நிலை என்ன ? வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள் நண்பர்களுக்கு வணக்கம்.இன்று காலை ஆசிரியர் தோழர்.முத்துக்குமரன் வங்கி கடன் தொடர்பான சந்தேகங்களை கேட்டார்.நானும் எனக்கு தெரியவில்லை என்று சொல்லி, அறந்தாங்கியில் வங்கி பணியில்உள்ள நண்பர் காசி விசுவநாதன் அவர்களிடம் கேட்டபோது ,வங்கி கடன் தொடர்பாக காசி விசுவநாதன் கூறிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். *🔥🔥வீட்டுக் கடன், வாகனக் கடன் ,பர்சனல் லோன் கடன்களுக்கான EMI கட்டும் தொகையானது மூன்று மாதங்களுக்கு தள்ளி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனை கட்டவே வேண்டாம் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. மூன்று மாதம் தள்ளி கட்ட சொல்லி உள்ளது. அது எப்படி ? விரிவாக காண்போம் : நாம் சுமாராக 120 மாதங்க...