வரி ஏய்ப்பு செய்தால் இனி வங்கிக் கணக்கில் பணம் இருக்காது... வருமான வரித் துறை அதிரடி!
வ ரி ஏய்ப்பாள
ர்கள் மற்றும் வரி பாக்கி வைத்துள்ளவர்களிடமிருந்து இனி நேரடியாகவே அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் முறையைப் பின்பற்ற வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018-19-ம் நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 12 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி வசூலாக வேண்டும். ஆனால், மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி மத்திய நேரடி வரி வசூல் 10.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 2017-18-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரித் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 12.5 சதவிகிதம் அதிகம் என்றாலும், எதிர்பார்த்த இலக்கு எட்டப்படவில்லை.
வரி வசூலை அதிகரிக்க அறிவுறுத்தல்
எனவே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வரி வசூலைத் தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தி, வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அண்மையில் கடிதம் எழுதியிருந்தது.
Comments
Post a Comment