முன்கூட்டியே பிடித்தம் செய்யப்படும் வருமானவரி பிடித்தம் (Advance prepaid Tax) மார்ச் 2019 முதல் பிடித்தம் செய்யவேண்டும்
2019-2020 ஆம் நிதியாண்டிற்கான முன்கூட்டியே பிடித்தம் செய்யப்படும் வருமானவரி பிடித்தம் (Advance prepaid Tax) மார்ச் 2019 முதல் பிடித்தம் செய்யவேண்டும்.
தோராயமாக 2019-2020 ஆம் ஆண்டு வருமானம் அதில் நிரந்தர கழிவு ரூபாய் 50000/ கழித்தது போக வரும் வருமானத்தில் கழிக்கப்படும் கழிவுகள்(80C ,80D,80G,Housing loan இதர) கணக்கிட்டு கழித்தது போக மீதம் வரும் வருமானம் தான் வரிசெலுத்தப்படும் வருமானம் (Taxable income) எனப்படும்.
இந்த வரி செலுத்தும் வருமானம் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கு குறைவாக(4,99,999) இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டியதில்லை.
ஐந்து இலட்சத்திற்கு மேல் இருந்தால் ரூபாய் 12500 + ஐந்து இலட்சத்திற்கு மேல் வரும் வருமானத்திற்கு 20% செலுத்த வேண்டும்.
அனைவரும் அவரவர் வருமானத்தை உத்தேசமாக கணக்கிட்டு வரி செலுத்தவேண்டும் எனில் மொத்த தொகையை 12 ஆல் வகுத்து வரும் தொகையை நூற்றுக்கு மாற்றம் செய்து (Nearest hundred) பிடித்தம் செய்திட அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
Comments
Post a Comment