10 நாள்தான் டைம்.. நாடு முழுக்க சம்பளதாரர்களுக்கு போன வார்னிங் மெசேஜ்.. பெரிய சிக்கல்
டிசம்பர் 31ம் தேதிக்குள் நீங்கள் தாக்கல் செய்த ITR ரிட்டர்ன் ஆய்வு செய்யப்பட்டு உங்களுக்கு பதில் அல்லது refund வழங்கப்படவில்லை என்றால்.. நீங்கள் திருத்தப்பட்ட (Revised) மற்றும் தாமதமான (Belated) வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் . 2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான திருத்தப்பட்ட (Revised) மற்றும் தாமதமான (Belated) வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 ஆகும். வரித்துறையின் மத்திய செயலாக்க மையம் (CPC) உங்கள் ITR-ஐச் செயல்படுத்தி, ஆவணங்களின் அடிப்படையில் தவறு கண்டறியப்பட்டால் அது உங்களுக்கு அறிவிக்கும். இதற்கு நீங்கள் பதில் அளிக்கலாம். ஆனால் டிசம்பர் 31க்கு உங்களுக்கு நோட்டீஸ் வந்தால் சிக்கல் ஏற்படும். டிசம்பர் 31, 2025-க்கு பிறகு ITR ஆய்வு செய்யப்பட்டு, அதன் பிறகு நோட்டீஸ் வந்தால், அந்த பிழையை சரிசெய்து திருத்தப்பட்ட ITR-ஐ தாக்கல் செய்ய முடியாது. ஏனென்றால் அதற்கான கால் அவகாசம் முடிந்துவிட்டது. அத்தகைய சூழ்நிலைகளில், மாற்றுத் தீர்வுகளை நாட வேண்டியிருக்கும். திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்வது தவிர வேறு வழிகள் என்னென்ன இருக்...