வருங்கால வைப்பு நிதி கணக்கில்- பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சம்பளதாரர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களின் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு சிறப்பான திட்டமாகவும் இருந்து வருகிறது. இந்த திட்டம் பலரையும் கவர முக்கிய காரணம் அவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டத்தில் வரிச்சலுகை உண்டு என்பதே. ஆனால் இந்த வரிச் சலுகைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி கடந்த பட்ஜெட்டில் வைக்கப்பட்டது எனலாம். கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல் பழைய விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தது எனலாம். ஏனெனில் பிஎஃப் வரி விகிதத்தில் ஒரு புதிய திருத்தத்தினை கொண்டு வந்தது. அதன் படி ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விதிக்கப்படும். இந்த நடவடிக்கையானது கடந்த ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிலருக்கு தளர்வுகள் எனினும் இதில் சில கட்டுப்பாடுகளுடன் சற்று தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளுடன் இந்த உச்ச வரம்பினை 5 லட்சமாக உயர்த்துவதாகவும் அப்போது அறிவிக்...