Logo
TEACHER INCOME TAX - ANITHA VISWANATH (9629803339)
HOME INFORMATION ▾ INCOME TAX ▾ FORM 39 ▾ 10E SOFTWARE TPF / CPS / GPF ▾ PENSION ▾ ITR TDS GST

பான் கார்டு எவற்றுக்கெல்லாம் முற்றிலும் கட்டாயம்? (PAN Mandatory):

பான் கார்டு எவற்றுக்கெல்லாம் முற்றிலும் கட்டாயம்? (PAN Mandatory):


பல முதலீடு தொடர்பான விஷயங்களில் பான் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் டிமேட் கணக்கைத் திறப்பதற்கும், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கும், ரூ.50,000-க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அவசியமாகும்.

* ஆண்டிற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுக்கும் (Cash Withdrawal Limit)போதும், ஒரு நிதியாண்டில் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்குகளில் இருந்து ஒட்டுமொத்தமாக (Cumulative) ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுக்கும்போதும் பான் கார்டு விவரங்களை குறிப்பிடுவது கட்டாயமாகும். இந்த ரூ.10 லட்சம் என்பது ஒரே முறையில் எடுக்கப்படும் பணம் அல்ல. ஒரே நிதியாண்டில் நீங்கள் பலமுறை எடுக்கும் பணத்தின் மொத்த கூட்டுத்தொகையாகும்.

* நிலம், வீடு அல்லது வணிக வளாகங்கள் போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் போதோ (Property Transactions)அல்லது விற்கும் போதோ பான் கார்டு விவரங்கள் கட்டாயமாகும்.

* இதுவரை பான் கார்டு இல்லாதவர்கள் பெரிய பரிவர்த்தனைகளின் போது ஃபார்ம் 60 (Form 60) படிவத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, இந்த ஃபார்ம் 60 முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஃபார்ம் 97 (Form 97) என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

-புதிய பான் கார்டு விதிமுறைகள் சாமானிய மக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இனிமேல் பான் இல்லாமல் பெரிய நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்வது கடினமாக இருக்கும்.

Comments

PREVIOUS IMPORTANT POSTS
Loading grid...