வருமான வரி தமிழக அரசு ஊழியர்கள் 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? FY 2026-27 AY 2027-28!
Sir/Madam, As per the Income Tax Act, the "New Regime" is the default tax regime for FY 2026-27. If you wish to opt for the Old Regime, please do so on or before 13.03.2026 through the Kalanjiyam mobile app or website. Once exercised, the option will be final. - TN Treasury
ஐயா/மேடம், வருமான வரிச் சட்டத்தின்படி, "புதிய வரி முறை" என்பது 2026-27 நிதியாண்டிற்கான இயல்புநிலை வரி முறையாகும். நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் களஞ்சியம் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் அவ்வாறு செய்யுங்கள். ஒருமுறை பயன்படுத்தினால், விருப்பமே இறுதியானதாக இருக்கும். - தமிழ்நாடு கருவூலம்
Tamilnadu State Accounting and Taxation Services Co operative Society Ltd. - XNC-895
Email – taxcooperative@gmail.com Website - www.tntaxsociety.com
No.23/1, 1 st floor, Alagiri Nagar 5Th street, 100 ft Road, Vadapalani, Chennai -600 026.
:No.579-585,1st floor,Balu Muthurangam Castle,Cross Cut Road,Gandhipuram,Coimbatore-641012.
OTHER TAMILNADU OFFICE
K S.Kumar-86107 62639, CMA Diwakar - 63806 74139, Anitha Viswanath -96298 03339 Pavithra -9787237027, Y.Paranthaman - 81908 29640,
🌟அரசு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?
1. புதிய வருமான வரியை தேர்ந்தெடுப்பவர்கள் தாங்கள் எதுவுமே செய்ய வேண்டிய அவசியம் இல்லை
2. பழைய வருமான முறையை தேர்ந்தெடுக்கப்பட்டால் தாங்கள் தங்களுடைய தொலைபேசி வாயிலாக களஞ்சியம் செயலியை பயன்படுத்தி பழைய முறைக்கு மாற்றலாம்.
3 பழைய வருமான முறை மாற்றப்பட்டால் எக்காலத்துக் கொண்டும் புதிய வருமான வரி பிடித்ததை தமிழக அரசுக்கான சம்பள பட்டியல் தயாரிக்கும் இணையதள மென்பொருள் மாற்றம் செய்ய இயலாது எனவே தாங்கள் புதிய வருமான வரி முறை வேண்டும் என்றால் தாங்கள் எதுவுமே செய்ய வேண்டிய அவசியம் இல்லை அது தானாகவே புதிய வருமான வரிமுறையை கொண்டு வரும்
தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் தாங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தால் அது புதிய வருமான முறையை தானாகவே ஏற்றுக்கொள்ளும் புதிய வருமான முறையில் வரும்
திருமதி. அனிதா விஸ்வநாத்
சென்னை
9629803339
CLICK TO 10E CALCULATOR ONLINE AS SUBSCRIBER
Labels:
INFORMATION
HRA கழிக்கும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அரசு செக
குடும்ப உறுப்பினர்களுக்கு செலுத்தும் வாடகைக்கு HRA கோரிக்கைகள் – ஏப்ரல் 1 முதல் கடுமையான விதிகள்
குடும்ப உறுப்பினர்கள் (தந்தை, தாய், உறவினர்கள் போன்றோர்)க்கு செலுத்தும் வாடகைக்கு House Rent Allowance (HRA) கோருவது இனி சற்று கடினமாகிறது. இந்திய அரசு புதிய வரி விதிகளை முன்மொழிந்து, ஆண்டிற்கு ₹1 லட்சத்தை மீறும் வாடகைக்கு Form 124-ல் வீட்டு உரிமையாளருடன் உள்ள உறவை கட்டாயமாக வெளியிட வேண்டும் என அறிவித்துள்ளது.
முக்கிய மாற்றங்கள்:
கட்டாய வெளிப்படுத்தல்: ஊழியர்கள் வீட்டு உரிமையாளருடன் (landlord) உள்ள உறவை குறிப்பிட வேண்டும்.
ஆவணச் சோதனை: வாடகை ஒப்பந்தம், வங்கி பரிமாற்றங்கள், உரிமையாளரின் PAN/ஆதார் ஆகியவை ஆய்வு செய்யப்படும்.
வரி இணக்கம்: வீட்டு உரிமையாளர் வாடகை வருமானத்தை தனது வருமான வரி அறிக்கையில் காட்ட வேண்டும்.
வரித்தாரர்களுக்கு ஏற்படும் தாக்கம்:
உண்மையான HRA கோரிக்கைகள் சரிபார்க்கப்படும்.
போலியான கோரிக்கைகள் குறையும்.
தவறான தகவல் வழங்கினால், தவிர்க்கப்பட்ட வரியின் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தகுதி மற்றும் தேவைகள்:
பெற்றோர், துணைவர் அல்லது உறவினர்களுக்கு செலுத்தும் வாடகைக்கு HRA கோரலாம் — ஆனால் அது உண்மையான ஏற்பாடாக இருக்க வேண்டும்.
சரியான வாடகை ஒப்பந்தம் மற்றும் வங்கி பரிமாற்ற ஆதாரம் அவசியம்.
வீட்டு உரிமையாளர் வாடகை வருமானத்தை தனது வரி அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.
சுருக்கமாக: ஏப்ரல் 1 முதல், குடும்பத்தினருக்கு செலுத்தும் வாடகைக்கு HRA கோருவது இன்னும் சாத்தியமே. ஆனால், முழுமையான ஆவணங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.
Labels:
INFORMATION
தங்க நகை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் கவனத்திற்கு
தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை...!
2026 ஏப்ரல் 1 முதல், தங்க நகைகளை வாங்கிய 2 ஆண்டுகளுக்குப் பின் விற்றால், இண்டெக்சேஷன் (Indexation) பலன் இன்றி, 12.5% நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) விதிக்கப்படும்
. 2 ஆண்டுகளுக்குள் விற்றால், அது குறுகிய கால முதலீடாகக் கருதப்பட்டு, உங்கள் வருமான வரி வரம்பு (Slab rate) அடிப்படையில் வரி வசூலிக்கப்படும்.
பழைய நகைகளை விற்கும்போது முறையான ஆவணங்கள் அவசியம், இல்லையெனில் வரிச்சுமை அதிகரிக்கும்.
இந்த புதிய வரி விதிமுறைகள் தங்கம் விற்பனை செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் வரிச் சுமையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Labels:
INFORMATION
TAPS CALCULATOR FOR TAMILNADU GOVERNMENT STAFF
TN TAPS Calculator
Tamil Nadu Assured Pension Scheme (2026 Rules)
Monthly Pension:
₹0
Family Pension (60%):
₹0
Max Gratuity:
₹25,00,000
*TAPS ensures 50% of (Pay + DA) for eligible staff.
Labels:
INFORMATION
அரசு ஊழியர்களுக்கு ஒரு அறிவுரை செய்தி
*ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது நாம் கவனிக்க வேண்டியது....*
👇👇👇👇👇👇👇👇
*ரூ.61,700/ அடிப்படை ஊதியம் பெற்று வரும் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு (2025-2026 ஆம் நிதியாண்டில்) Gross Income தோராயமாக 12,28,638/- வரக்கூடும்.*
*இந்த தொகைக்கு (12,75,000 வரைக்குமே) வருமான வரி வராது.*
அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட ஆசிரியர் 01/10/2025 அன்று ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம்.
அவருக்கு *EL Surrender Amount Rs.50,343/-* கிடைக்கும் பட்சத்தில்....
(2025-2026 ஆம் நிதியாண்டில்)
*Gross Income Rs.12,78,981/-* ஆக அதிகரிக்கும்.
அப்போது அந்த தொகைக்கு வருமான வரி கணக்கீடு செய்து பார்த்தால்....
👇👇👇👇👇👇👇
0-4 lakh - Nil
4-8 lakh - 20,000 (5%)
8-12 lakh - 40,000 (10%)
Above 12 lakh - 597 (15%)
*Total Tax = 60,597/-* வரும்.
(அதாவது அந்த ஆசிரியர் EL Surrender விண்ணப்பிக்காமல் இருந்தால் IT வராது. விண்ணப்பித்து Surrender பெற்றால்... தான் பெறும் Surrender தொகையை விட கூடுதலாக IT செலுத்த நேரிடும்.)
ANITHA VISWANATH 9629803339
எனவே,
2025-2026 ஆம் நிதியாண்டில் தாங்கள் Gross Income 12 இலட்சத்தில் இருந்து 12,75,000-க்குள் பெறுபவராக இருந்து *வருமான வரியில் இருந்து விலக்கு* பெறக்கூடிய வாய்ப்பு இருக்கும்பட்சத்தில்....
தாங்கள் 01/10/2025 அன்று அல்லது *31/03/2026-க்கு முன்னதாக* ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வதினால் அந்த ஒப்படைப்பு தொகையை வருமான வரியாக செலுத்தும் நிலை ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
முடிந்தவரை இந்த *2025-2026 ஆம் நிதியாண்டில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய இருப்பவர்கள் வருமான வரியை*
*(with EL Surrender / without EL Surrender என இருவேறாக) கணக்கீடு செய்து* பார்த்துக்கொள்வது நன்று. 🙏 DOWNLOAD INCOME TAX SOFTWARE BELOW
*குறிப்பு :- இந்த கணக்கீடு ஒரு உதாரணத்திற்காக மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.*
Labels:
INFORMATION
Subscribe to:
Posts (Atom)




.jpg)