வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாள் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அபராதத் தொகை அறிவிப்பு.
2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விவரங்களை இதுவரையில் 4 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா். ஜூலை 31-ஆம் தேதி வரையில் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.
இதுவரை தாக்கல் செய்யாதவா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை சார்பில் தெரிவித்திருந்தது
தற்போதைய நிலையில் காலக்கெடு வழக்கம்போல் நீட்டிக்கப்படும் என்ற எதிா்பார்ப்பு பெரும்பாலான மக்களிடம் நிலவுவதால் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வோா் எண்ணிக்கை சிறிது குறைவாக உள்ளது.
தற்போது கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாளையுடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது:
குடியரசுத் தலைவருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு
அதன்படி, ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000, ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
TEACHER INCOME-TAX WEBSITE
ANITHA VISWANATH
9629803339
Comments
Post a Comment