Income Tax தாக்கல் செய்தே ஆக வேண்டுமா..? ஏன்..? என்ன நன்மை

ன்மை..?

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் துறையிடம் தனி நபரோ, இந்து கூட்டுக் குடும்ப அமைப்போ, நிறுவனமோ, நிறுமங்களோ, எல்லோரும் முறையாக தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு ஜூலை 31, 2019 தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருந்தது. ஆனால் நேற்று தான் அரசு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு (ஆகஸ்ட் 31, 2019 வரை) வழங்கி இருக்கும் செய்தி வெளியானது.


Income Tax தாக்கல் செய்வது அவ்வளவு அவசியமா..? ஏன் ஒரு தனி நபர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்..? Income Tax தாக்கல் செய்வதால் ஒருவருக்கு என்ன நன்மை..? வாருங்கள் பார்ப்போம்.
1. ரீஃபண்ட்: ஏழை எளிய மக்கள் பலரும் தங்களுக்கான வரி பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைக் கூட பார்க்கத் தெரிவதில்லை. ஆகையால் வருமான வரி தாக்கல் செய்ய வரும் போது தான் கூடுதலாக செலுத்தி இருக்கும் வரியை முறையாக ரீஃபண்ட் பெற முடியும். ஆதலால் Income Tax தாக்கல் செய்வீர் ப்ரோ.
2. கடன்: இன்று சொந்த வீடு, சொந்த கார் வாங்குவது எல்லாம் நம் சொந்த பணத்தில் சாத்தியமே இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. எப்படியும் வங்கிக் கடன் தான் வாங்க வேண்டும். ஆகையால் Income Tax தாக்கல் செய்திருந்தால், நமக்கு கிடைக்க வேண்டிய கடன் கொஞ்சம் எளிதில் கிடைக்கும்.
3. நட்டக் கணக்கு: பங்குகளில் முதலீடு செய்து, ஏற்பட்ட நட்டத்தை அடுத்தடுத்த ஆண்டுகளில் Carry forward செய்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் பங்கு சார் வருமானத்துக்கு கழிவு பெற வேண்டும் என்றால், ஒவ்வொரு வருடமும் முறையாக Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.
4. வருமான சான்று: அரசு அலுவலகங்களில் நம்முடைய வருமான சான்றாக, நாம் செலுத்திய Income Tax படிவங்களைக் காண்பிக்கலாம். அதற்கு இது உதவும்.
5. சட்ட சிக்கல்கள்: சில வருடங்களுக்குப் பின், ஏன் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என வருமான வரித் துறை நமக்கு நோட்டீஸ் விட்டு கேட்பதற்கு பதிலாக, நாம் இன்றே ஒழுங்காக வருமான வரி தாக்கல் செய்து நல்ல பிள்ளையாகி விடுவோமே. அதற்காக Income Tax தாக்கல் செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

மத்தியில் பணிபுரிபவர்கள் எட்டாவது ஊதியம் சார்நத்து ஊழியர் இணையதளம் என்ற இணையதளத்தில் எவ்வளவு என வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணை பட்டியல்

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

TAMILNADU GOVERNMENT STAFF CPS ACCOUNT SLIP DOWNLOAD