உங்கள் வருமான வரி தாக்கல் ஆனது புதிய தொழில்நுட்பத்தின் ( AI) படி கண்காணிக்கப்படும்

இந்த வருமான வரித்துறை இப்போது அதிநவீனமான Artificial Intelligence (AI) மாடல் மூலம் உங்கள் வருமான வரி ITR ரிட்டர்னை முழுமையாக சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இதுவரை மனித அதிகாரிகள் மட்டுமே ரிட்டர்னை சோதனை செய்திருந்தார்கள். ஆனால் கடந்த வருடம் முதல் AI மூலம் இந்த சோதனை துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு அடிப்படை AI மாடல் பயன்படுத்தப்பட்டது. இப்போதோ, அதன் மேம்பட்ட பதிப்பு – அதாவது, advanced AI model – தான் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த AI மாடல் ரிட்டர்னில் உள்ள தரவுகளை மிக நுணுக்கமாக ஸ்கேன் செய்யும். Form 26AS, AIS, Form 16, Bank statement போன்ற அனைத்தையும் cross-check செய்து, அவற்றில் உள்ள ஏதேனும் வித்யாசம், மிகைப்படுத்தப்பட்ட deduction claims, ஹெச்சான refunds request, multiple PAN usage, அல்லது income spikes போன்ற சந்தேகப்படுத்தக்கூடிய விவரங்களை உடனே கண்டுபிடிக்கிறது. இது மட்டும் இல்லாமல், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு income pattern, expense behaviour, investment trends எல்லாவற்றையும் ஆய்வு செய்கிறது.

இதன் மூலம் அதிக அளவில் தவறான தகவல்களை தாக்கல் செய்யும் practices தடையின்றி கண்டுபிடிக்க முடிகிறது. இப்போது system-level screening நடக்கிறது என்பதால், manual checking தேவையில்லை. இதில் raise ஆகும் red flags-ஐ human officers தான் final-a action எடுக்கிறார்கள்.

அதனால், இந்த வருடம் ITR தாக்கல் செய்யும் ஒவ்வொருவரும் மிகுந்த கவனத்துடன் genuine documents அடிப்படையில் return தாக்கல் செய்ய வேண்டும். Form 26AS, AIS, மற்றும் PAN விவரங்களை சரிபார்த்து, உண்மையான வருமானம் மற்றும் செலவுகளை மட்டும் தாக்கல் செய்யுங்கள். ஏனெனில் இப்போது "smart AI" நம்மை எல்லாம் விரைவில் தெரிந்து கொள்கிறது. நேர்மையான return தான் பாதுகாப்பான return ஆகும் 

Comments

Popular posts from this blog

மத்தியில் பணிபுரிபவர்கள் எட்டாவது ஊதியம் சார்நத்து ஊழியர் இணையதளம் என்ற இணையதளத்தில் எவ்வளவு என வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணை பட்டியல்

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

INCOME TAX SOFTWARE ALL AGE AUTOMATIC FY 2025-26 AY 2026-27 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2025-2026 INCOME TAX SOFTWARE FY 2025-2026 FOR TAMILNADU GOVERNMENT STAFFS