வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம்
புதிய வலைத்தளம் நடைமுறைக்கு (ஜூன் 7 இரவு) முதல் வருமான வரியினை தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய வலைத்தளமான www.incometax.gov.in
தளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் 1, 2 ஆகியவற்றினை தாக்கல் செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
அந்த மென்பொருளில் படிவங்களை பூர்த்தி செய்வதறகான வழிமுறைகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வருமான வரி செலுத்தும் மக்கள் மிகுந்த பயனடைவர் என்றும் வருவமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 3, 4, 5, 6, 7 ஆகியவற்றினை பூர்த்தி செய்வதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் புதிய வலைத்தளம் மூலம் கணக்கு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் வருமான வரி கணக்கு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தையும் வலைத்தளம் முன்கூட்டிய சேமித்து வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment