ஜூன் 30-க்குள் இதை செய்யாவிட்டால் உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை.! ஏன்?

பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க மார்ச் மாதம் 31-ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது,ஆனால் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஜூன் 30ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்க்பட்டது.
எனவே இம்மாத இறுதியுடன் காலக்கெடு முடிவதால், ஆதால் கார்டுடன் இணைக்கப்படாத லட்சக்கணக்கான பான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, பின்பு இப்போது புதிதாக பான் கார்டு பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால் பான் கார்டு ஆனது செயலிழக்க வாய்ப்பு உள்ளதுஎன்றுதான் கூறவேண்டும். மேலும் பான் கார்டு விவரங்களை வழங்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax e-filing வலைத்தளம்
ஒருவேளை நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின்
Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம்.
எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம்
இரண்டாவது வழி 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது
என்று விரிவாக பார்ப்போம் வாங்க...
வருமான வரித்துறையின் வலைதளம்
வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்
வழிமுறை-1:
முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள்
(https://www.incometaxindiaefiling.gov.in)செல்ல வேணடும்.
வழிமுறை-2
அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை-3
அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண்
மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
வழிமுறை-4
பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு
டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.
வழிமுறை-5
அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க வழிமுறைகளைப் பார்ப்போம்.
வழிமுறை-1
முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்.
வழிமுறை-2
அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

Comments

Popular posts from this blog

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE & PDF FORM FY 2023-24 AY 2024-25 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் 2024-2025 INCOME TAX SOFTWARE 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS