நெருங்குகிறது கடைசி நாள்.. Income tax கட்டாதவர்கள் முதலில் இதை செய்து முடியுங்கள்!*

*

ITR E-Filing Last Date : வருமான வரி தாக்கல் செய்த பின்பு ரீஃபண்டிற்காக இனிமேல் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2019.

வருமானவரித் தாக்கல் செய்வதன் கடைசி படி அதனை சரிபார்ப்பதுதான். இதைச் செய்தால் மட்டுமே வருமான வரி தாக்கல் முழுமை அடையும்.மாதச் சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவில் வருவோரும் தங்களின் ஆண்டு வருமானத்திற்கு உரிய வருமான வரி ரிட்டன்களை ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும்.

கால தாமதம் ஏற்பட முக்கிய காரணமே, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணைய தளமும் (e-filing portal), வரி செலுத்த உதவும் இணையதளமும் (Centalized processing centre) வேறு வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதே ஆகும்.

தற்போது இ-ஃபைலிங் இணைய தளத்தை டிசிஎஸ் (TCS) நிறுவனமும், சிபிசி(CPC) இணையதளத்தை இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனமும் தனித்தனியே நிர்வகிப்பதே கால தாமதம் மற்றும் உபரி வரிக்கான கூடுதல் வட்டியையும் மத்திய வருமான வரி ஆணையம் இழப்பதற்கு காரணமாகும்.
ITR Filing Last Date : வருமான வரி கட்ட செய்ய வேண்டியவை!

ஆஃப்லைனில் சரி பார்த்தல்

தபால் மூலம் ஆவணங்களை அனுப்பி வருவான வரி தாக்கல் செய்திருந்தால், வருமான வரி இணையதளத்திற்குச் சென்று ITR-V படிவத்தைச் டவுன்லோட் செய்ய வேண்டும்.

அதை பிரிண்ட் செய்து கையொப்பம் இட்டு மீண்டும் தபால் மூலமே அனுப்ப வேண்டும். அனுப்பும் கையொப்பமிட்ட படிவம் பெங்களூரில் உள்ள சிபிசி (CPC) அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் கிடைக்க வேண்டும்.

ஆன்லைனில் சரிபார்த்தல்

வருமான வரி இணையதளம் மூலமாக டிஜிட்டலாகவே வருவான வரி தாக்கல் செய்திருந்தால், இந்த முறையை பயன்படுத்தி தபால் அனுப்பாமலே சரி பார்க்க முடியும்.

நெட் பேங்கிங்

நெட் பேங்கிங் மூலம் சரிபார்க்க, வங்கியின் நெட் பேங்கிங் கணக்கில் உள்நுழைந்து 'மை அக்கவுண்ட்' (My Acccount) பகுதிக்குச் செல்ல வேண்டும். அதில் 'e-verify return' என்பதைத் கிளிக் செய்ய வேண்டும். அதில் வலது பக்கத்தில் உள்ள 'e-verify' என்பதை கிளிக் செய்து வருமான வரி தாக்கலை சரிபார்க்கலாம்.

வங்கிக் கணக்கு

நெட் பேங்கிங் உபயோகிக்கவில்லை என்றால், ஈவிசி (EVC) எனப்படும் குறியீட்டு எண் மூலம் வருமான வரி தாக்கலை சரிபார்க்க முடியும். இந்த குறியீட்டு எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும்.

ஆதார் எண்

ஆதார் எண் மூலமும் வருமான வரி தாக்கலை சரிபார்க்கலாம். இந்த வழியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் பாஸ்வேர்ட் மூலம் வருமான வரி தாக்கலை சரிபார்த்துவிடலாம்.

மாத சம்பளம் வாங்குபவர்கள் அனைவரும் Income tax கட்ட வேண்டுமா? உங்கள் கேள்விக்கான பதில் இதோ.

Comments

Popular posts from this blog

INCOME TAX SOFTWARE ALL AGE AUTOMATIC FY 2025-26 AY 2026-27 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2025-2026 INCOME TAX SOFTWARE FY 2025-2026 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

TAMILNADU GOVERNMENT STAFF CPS ACCOUNT SLIP DOWNLOAD