Income Tax Return 2019-20 : வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள தவறான தகவல்களை அளிக்காதீர்கள்… HRA மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்!
Income Tax Return E-Filing 2019 : எச்.ஆர்.ஏவை வைத்து விளையாட வேண்டாம்... உண்மை கண்டறியப்பட்டால் சலுகைகள் நிறுத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.
BY:
Income Tax Return 2019-20 : வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள தவறான தகவல்களை அளிக்காதீர்கள்… மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்!
Income Tax Return E-Filing for AY 2019-20 : தாங்கள் வசிக்கும் வீட்டிற்கான வாடகை ரூ. 8,300-ஐ தாண்டும் பட்சத்தில் எச்.ஆர்.ஏ எனப்படும் House Rent Allowance மூலமாக வருமான வரியில் இருந்து சிறு சலுகை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் 1 லட்சம் வரை வாடகை கட்டும் சூழல் ஏற்பட்டாலும், வீட்டு உரிமையாளரின் பான் கார்ட் எண்ணை நாம் ஐ.டி.ஆரில் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் இது போன்ற தகவல்களை முறையாக தங்களின் அக்கௌண்ட்ஸ் டீமில் குறிப்பிடுவதில்லை. அப்படி குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால், பணியாளர்கள் தங்களின் வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீதினை பெற்று ஃபார்ம் 16ல் இணைக்க வேண்டும். அது மிகவும் கட்டாயம் ஆகும். ஆனால் ஐ.டி.ஆர் ஃபைல் செய்யும் போது எந்த விதமான ஒப்பந்தங்களும் தேவைப்படுவதில்லை. இதனை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, போலியான தகவல்களை உள்ளே பதிவிடுகின்றனர்.
ஆனால் இனி அதற்கு வாய்ப்புகள் இல்லை. ஐ.டி.ஆர் மற்றும் ஃபார்ம் 16 இது இரண்டையும் வருமான வரித்துறை ஒப்பிட்டு பார்க்கும். இணையம் வழியாக ஐ.டி.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, இந்த இரண்டு ஆவணங்களிலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் முரணாக இருந்தால் உடனே அது குறித்து உங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும்.
இது ஒரு நல்ல துவக்கம். இதனால் வருமான வரித்துறையினர் தங்களின் தரவினை சரிவர சோதனை செய்து கொள்ள வசதியாக இருக்கும். எச்.ஆர்.ஏ, எல்.டி.ஏ மற்றும் பென்சன் ஆகியவை குறித்து தனித்தனியாக நாம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஒரு வேலை மறந்துவிட்டால், வருமான வரித்துறையினரின் நோட்டீஸிற்காக காத்திருங்கள் என்று கூறுகிறார் சி.ஏ. கரண் பத்ரா.
நோட்டீஸ் வந்த பிறகு நீங்கள் உங்களின் வங்கி பணப்பரிமாற்ற விபரம், வாடகை ரசீது, வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே எச்.ஆர்.ஏவை வைத்து விளையாட வேண்டாம் என்றும் தவறு நிகழ்ந்தது கண்டறியப்பட்டால் இதற்கு முன்பு உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment