வருமான வரி வரம்பு உயர்த்தப்படலாம்
தனிநபர் வருமான வரி வரம்பு தற்போதுள்ள ரூ.2.5 லட்சம் என்ற நிலையிலிருந்து உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 5-ம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடு முழுதும் உள்ள 226 நிறுவனங்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 74 சதவீதத்தினர், தனிநபர் வருமான வரி வரம்பு தற்போது இருக்கும் வரம்பான ரூ.2.5 லட்சத்திலிருந்து உயர்த்தப்படும் என்று கூறியுள்ளனர். ஆண்டு வருமானம் 10 கோடிக்கு மேல் இருப்பவர்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படலாம் என்று 58 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். வீட்டுக்கடன் சார்ந்த வட்டிக்கான வரிவிலக்கு வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து அதிகரிக்கக் கூடும் என்று 65 சதவீதத்தினர் கருதுகின்றனர். சொத்து வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று 10 சதவீதத்தினரும், பரம்பரை சொத்துக்கான வரி மீண்டும் கொண்டு வரப்படும் என்று 13 சதவீதத்தினரும் கூறிஉள்ளனர்.
கடந்த பிப்வரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு முழுமையான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது. இது ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு பொருந்தாது எனக்கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள பிரதான பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்படலாம்
என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment