வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உள்ளோர் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்
முக்கிய ஆவணங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன், அதற்கு தேவையான அனைத்து முக்கிய ஆவணங்களையும் பயன்படுத்துவதற்கு வசதியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். வருமான வரி செலுத்துபவர் மாத சம்பளம் பெறுபவர் என்றால், படிவம் 16யை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ காப்பீடு ரசீது, மியூச்சுவல் பண்ட்ஸ், பங்கு பரிவர்த்தனைகள் வங்கி சேமிப்பு திட்டங்கள், சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளிட்ட வரிச்சலுகை கோருவதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல், வங்கிகள் வழங்கும் வட்டிக்கான சான்றிதழ், கடன்களுக்கான வட்டி சான்றிதழ், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீதுகள், பங்குவர்த்தகம், பங்குகளை விற்பனை செய்ததற்கான சான்று, ரியல் எஸ்டேட் யூனிட்கள், சாலரி சிலிப் போன்ற முக்கிய ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
வரிச்சலுகைகளை கிளைம் செய்யுங்கள்
வரிச்சலுகைகளை கிளைம் செய்வதன் மூலம், நாம் செலுத்தும் வருமான வரியின் அளவை குறைக்கலாம். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன், நாம் கட்ட உள்ள வரிகள் அனைத்தும் 80சி. 80டி, 80 டிடில 80 இஇ, 80சிசிடி 80டிடிஏ மற்றும் 80இ பிரிவுகளின் கீழ் வரிச்சலுகைக்கு தகுதி உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
அபராதங்களை தவிர்ப்போம்
வருமான வரி கணக்கை சரியான நேரத்தில் செலுத்திவிட்டால், கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள அபராதங்களை, சிலநேரங்களில் வருமானவரித்துறை ரத்து செய்கிறது. எனவே, உரிய நேரத்ததில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து அபராதம் உள்ளிட்ட தேவையில்லாத பண இழப்புகளை தவிர்ப்போம்
மேலும் வங்கி மூலம் Tax செலுத்துவோர் குறித்த காலத்தில் காலாண்டு வாரியாக பிரித்து Tax கட்டுதல் அவசியமாகிறது ஏன் எனில் 234 C படி வட்டி விதிக்க துறையாள் முடியும்.
Comments
Post a Comment