ITR E-filing : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?

ITR E-filing : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?


Income Tax Return (ITR) e-filing Online : இவை அனைத்தும் முறையாக கால்குலேட் செய்யப்பட்டிருந்தால், இன்கம் டேக்ஸ் ரிட்டனை உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

Income Tax Return (ITR) e-filing Online: எப்போதுமே ஃபார்ம் 16 மூலமாகத் தான் வருமான வரி தாக்கல் செய்வோம். ஆனால் நம் நிறுவனங்களில் அந்த படிவத்தினை வாங்கி பூர்த்தி செய்து, அனுப்புவது என்பது பெரும் தலைவலி தான். இனி அந்த கவலை இல்லை. இணையத்தின் மூலம் உங்களின் தகவல்களை பூர்த்தி நீங்கள் நேரடியாக வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யலாம்.

உங்களின் ஃபார்ம் 16 என்பது உங்களின் வருமானம், வரி, மற்றும் டி.டி.எஸ் என்னென்ன என்பதை திட்டவட்டமாக விளக்கும் ஒரு சான்றாகும்.

payslips
உங்களின் பே ஸ்லிப்பினை (payslips) வைத்து நீங்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் என்று கணித்துக் கொள்ள இயலும். ஒரு நிதி ஆண்டில் நீங்கள் பெற்ற 12 மாதத்திற்கான பே ஸ்லிப்பினையும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நெட் சேலரியையும் கணக்கில் கொள்ளுங்கள்.

26-AS
26-AS ஃபார்மில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்களின் டி.டி.எஸ் மதிப்பினையும், உங்களின் பே ஸ்லிப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் டி.டி.எஸ் மதிப்பினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதனை உங்கள் நிறுவனத்திடம் கேட்டு க்ளாரிஃபை செய்து கொள்ளவும்.

வீட்டு வாடகை ஃபில்
House Rent Allowance எனப்படும் வீட்டு வாடகைக்கான தொகை உங்களின் சம்பள பணத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த பணத்தினை குறைக்க உங்களின் வீட்டு வாடகை ஃபில்களை முன்பே உங்களின் நிறுவனங்களிடம் சமர்பித்துவிடுங்கள்.

காப்பீடுகள்
நீங்கள் மாதாமாதம் உங்கள் பெயரில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் போட்டு வைத்திருக்கும் காப்பீடுகளுக்கு பணம் செலுத்துவீர்கள். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவைகளை கட்டுவதற்கான ரசீதுகள் மற்றும் பி.எஃப்., பி.பி.எஃப் போன்ற சேமிப்புத்திட்ட விவரங்களை சமர்பித்தால் மேலும் நீங்கள் கட்ட வேண்டிய வரியின் விகிதம் குறைக்கப்படும்.

இதர வருமானம்
வாடகைக்கு வீடு தருதல், ஃபிக்சட் டெபாசிட் மூலம் பெரும் பணம் ஆகியவற்றையும் மறக்காமல் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

26AS ஃபார்மில் குறிப்பிட்ட அளவை விட குறைந்த அளவில் நீங்கள் வருமான வரி செலுத்தி இருணந்தால் காலம் தாழ்த்தாமல் மீதத் தொகையும் கட்டிவிடுங்கள்

இவை அனைத்தும் முறையாக கால்குலேட் செய்யப்பட்டிருந்தால், உங்களின் இன்கம் டேக்ஸ் ரிட்டனை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE & PDF FORM FY 2023-24 AY 2024-25 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் 2024-2025 INCOME TAX SOFTWARE 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES