இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது*

Admin 9629803339  MRS. Anitha VISWANATH




இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது*

மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் பிடித்தம் செய்வதற்கு ஆதாரமான ஃபார்ம் 16 படிவத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

இதில் ஊழியர்கள் தங்களின் வருமானம் முதல் வாடகை மற்றம் அனைத்து வரவு செலவுகளையும் கண்டிப்பாக அதில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.TDS பிடித்தத்திற்கான புதிய படிவம் ஃபார்ம்(Form 16) வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட புதிய படிவத்தை அடிப்படையாகக் கொண்டே மாதச் சம்பளம் வாங்குவோர் தங்களின் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

*மாத சம்பளதாரர்கள்*

தனி நபர், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டு தோறும் மேம்படுத்தி மாற்றிக் கொண்டே வருவது வாடிக்கை. அதே போல் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிடடன்களையும் இந்த மாத தொடக்கத்தில் மாற்றியமைத்து இணையத்தில் வெளியிட்டது.

*ஃபார்ம் 16*

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அனைத்து படிவங்களையும் வருமான வரித்துறை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்தாலும், வருமான வரிக்கழிவுக்கான (Tax Deduction at Source) ஃபார்ம் 16 படிவத்தில் இது வரையிலும் எந்த மாற்றமும் செய்யாமலேயே இருந்து வந்தது.

*வருமான வரி பிடித்தம்*

ஃபார்ம் 16 (Form 16) என்பது ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, அதாவது வருமான வரி உச்சவரம்புக்கு மேற்பட்டு சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் ( (TDS) செய்ததற்காக ஒவ்வொரு காலாண்டு முடிந்தவுடன் வழங்கும் அத்தாட்சி சான்றிதழாகும்.

*TDS பிடித்தம் எப்படி*

பிரதி மாதமும் பிடித்தம் செய்த வருமான வரியானது (TDS) உரிய முறையில் தங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை இதை வைத்துத்தான் வருமான வரி செலுத்தும் அனைவரும அறிந்துகொள்ளமுடியும். சில நிறுவனங்கள் பிரதி மாதமும் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வரியை காலம் தாழ்த்தியும் வருமான வரித்துறைக்கு செலுத்துவதும் வாடிக்கை.

*வருமான வரி ரிட்டனை தாக்கல்*

தற்போது வருமான வரித்துறை ஃபார்ம் 16 படிவத்தையும் முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது. இந்த படிவமானது வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்தும் அனைரும் புதிய ஃபார்ம் 16 படிவத்தை அடிப்படையாக வைத்துத்தான் தங்களின் 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியும் என்று வருமானத் துறை அறிவித்துள்ளது.

*புதிய படிவத்தில் என்ன இருக்கு*

மாற்றியமைக்கப்பட்ட புதிய ஃபார்ம் 16 படிவத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். வருமான வரி செலுத்துபவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் (Savings Accounts) டெபாசிட் செய்துள்ள பணத்திற்கான வட்டி, தள்ளுபடி மற்றும் கட்டணம் ஏதும் இருந்தாலும் அந்த விவரத்தையும் புதிய ஃபார்ம் 16 படிவத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

*நிரந்தர கணக்கு எண்*

ஃபார்ம் 16 படிவத்தோடு தொடர்புடைய மற்றொரு படிவமான ஃபார்ம் 24க்யூ (Form 24Q) படிவம். இதில் தான் யாருக்கெல்லாம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது, அவர்களின் நிரந்தர கணக்கு எண் (PAN) போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த படிவத்தை ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனங்கள் வருமான வரித்துறைக்க தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும்.

*கடன் மற்றும் வீட்டுக்கடன்*

தற்போது ஃபார்ம் 24க்யூ (24Q) விலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் பான் எண்ணுடன், அவர்கள் யார் யாரிடம் இருந்து மற்றும் எந்த நிறுவனம் அல்லது நிறுவனம் அல்லாத நபர்களிடம் (Non Institutional Entities) இருந்து கடன் மற்றும் வீட்டுக்கடன் வாங்கியிருந்தாலும் அவர்களின் பான் எண் விவரத்தையும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

*நிரந்தர கழிவு*

ஃபார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெளிவாக விளக்கிய நாங்கியா அட்வைசர் (ஆண்டர்சன் குளோபல்) நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சோலி மகேஸ்வரி, தற்போது வருமான வரிக்கழிவுக்கான ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 24க்யூ வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் வருமான வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரி ரிட்டனில் அனைத்து விவரங்களையும் விரிவாக தெரிவிக்க முடியும். குறிப்பாக வருமான வரி பிரிவு 10ன் கீழ் வரும் நிரந்தர கழிவு (standard deduction) மற்றும் வருமான வரி விலக்குக்கான அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிவிக்க முடியும்.

*ஓடி ஒளிய முடியாது*

வருமான வரி செலுத்துவோர் முன்னர் இருந்த படிவங்களில் வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைக்கான விவரங்களை பிரிவு 80C, 80CCD, 80E மற்றும் 80G பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் போலியாக தெரிவித்து வரிச்சலுகையும் வரி விலக்கும் பெற்று வந்தனர். தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள `பார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் போலியான தகவல்களை எல்லாம் தெரிவிக்க முடியாது. அப்படியே போலியாக தெரிவித்து இருந்தாலும் வருமான வரித்துறை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து கண்காணிக்கவும் முடியும். இது வருமான வரி செலுத்துவோருக்கு மிகப் பெரிய சிக்கலாகும்.

Comments

Popular posts from this blog

மத்தியில் பணிபுரிபவர்கள் எட்டாவது ஊதியம் சார்நத்து ஊழியர் இணையதளம் என்ற இணையதளத்தில் எவ்வளவு என வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணை பட்டியல்

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES