முறைகேடான பரிவர்த்தனை மீது நடவடிக்கை
முறைகேடான பரிவர்த்தனை
மீது நடவடிக்கை
கறுப்புப் பணத்தை ஒழிக்க, மத்திய அரசு
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், வரி ஏய்ப்போர்
மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் செய்யும் சிறு தவறுகளுக்கு கூட, வருமானவரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது. டி.டி.எஸ்., எனப்படும், ஊழியர் சம்பளத்தில் பிடித்தம் செய்து செலுத்தப்படும் வரியில், குளறுபடி இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு விளக்கம் கேட்பது, சமீப காலமாக அதிகரித்து உள்ளது. மும்பையில், ஊழியர்களிடம், 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, டி.டி.எஸ்., பிடித்தம் செய்து, அந்த பணத்தை வரித்துறைக்கு செலுத்தாத, பல நிறுவனங்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.இது தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வரித்துறை, அவ்வப்போது,
சமீபத்திய வரி விதிகள் குறித்த தகவல்களை, விளம்பரப்படுத்தி வருகிறது. வரித்துறை விதிகளுக்கு மாறாக இருந்தால், சிறிய தவறுகளுக்கு கூட, தண்டனை
விதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வரிகள் தொடர்பான ஆலோசக நிறுவனத்தை சேர்ந்த, அசோக் ஷா
இதுகுறித்து, வரிகள் தொடர்பான ஆலோசக நிறுவனத்தை சேர்ந்த, அசோக் ஷா
கூறியதாவது:பல பரிவர்த்தனைகள் அல்லது சாதாரணமானவையாக
தோன்றலாம். ஆனால், அவை, இந்திய வரி சட்டத்தின் கீழ், கடும்
பெற்றாலோதண்ட
னைக்கு உரியவையாக இருக்கும். அத்தகைய பரிவர்த்தனைகளில்
ஈடுபட
வேண்டாம் என, வரி செலுத்துவோர்
எச்சரிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர்
கூறினார்.
வரித்துறை விதிகளின்படி, தவறான பரிவர்த்தனைகள் வருமாறு: ஒருவர், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ரொக்கமாக கடன்கொடுத்தாலோ, அது தவறு. 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, ரொக்க பரிவர்த்தனை செய்தால், அந்த தொகைக்கு நிகரான அபராதம் விதிக்க, சட்டத்தில் இடமுண்டு தொழில், பணி நிமித்தமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, ரொக்கமாக செலுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், லாப - நஷ்டக் கணக்கில், இத்தகைய செலவினங்களுக்கு, பணத்தை கழிக்க அனுமதி கிடையாது.அரசியல் கட்சிகளுக்கு அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்புக்கு, 2,000 ரூபாய்க்கு கூடுதலாக, ரொக்கமாக, நன்கொடை தரக்கூடாது. அவ்வாறு செய்தால், வருமான வரி சட்டம், 80 ஜியின் கீழ் வரி விலக்கு கிடையாது. டி.டி.எஸ்., தொகையை, வருமான வரித்துறையிடம், 'டிபாசிட்' செய்யாமல் இருப்பது குற்றம். இந்த தவறை செய்வோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இந்த தவறுக்கு, டி.டி.எஸ்., தொகைக்கு நிகராக அபராதம் விதிக்கப்படலாம். தாமதமாக செலுத்தப்படும் தொகை மீது, மாதம், 1.5 சதவீத வட்டி வசூலிக்கப்படும்
வீடு அல்லது நகை வாங்க, 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, ரொக்கமாக செலுத்தினால், அந்த பணம் வங்கியில் பெறப்பட்டு இருந்தாலும், அந்த தொகைக்கு நிகராக அபராதம் விதிக்கப்படும்= உங்கள் பெயரை, மூன்றாம் நபர் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த அனுமதித்தால், அந்த பரிமாற்றத்தை உங்கள் கணக்கில் வைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக, தவறான
தகவல் அளித்தால், அபராதம் மற்றும்
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் உரிய வரி செலுத்தாமல், வருமான வரி
கணக்கு தாக்கல் செய்வது தவறு. அதற்கு, செலுத்த வேண்டிய
வரி மீது, மாதம், 1 சதவீத தொகை, அபராதமாக பெறப்படும். வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி சட்ட
நடவடிக்கை எடுக்கும்.'நோட்டீஸ்' வந்தால்என்ன
செய்யலாம்?வரித்துறையிடம் இருந்து, 'நோட்டீஸ்' வந்தால், முதலில், அதில் உள்ள
தகவல்கள் சரியா என பாருங்கள். பொதுவாக, தேவையான ஆவணங்கள்
இல்லாவிடில், இத்தகைய, 'நோட்டீஸ்' அனுப்பப்படுவது வழக்கம்.வரித்துறையிடம் உள்ள தகவல்களும், நீங்கள் சமர்ப்பித்த வருமான வரி கணக்கில் உள்ள தகவல்களும்
பொருந்தா விட்டாலும், 'நோட்டீஸ்' அனுப்பப்படும்.அப்படி, 'நோட்டீஸ்' வந்தால், இணையதளம் மூலம், வரித்துறைக்கு
தக்க விளக்கத்தை நீங்கள் அளிக்கலாம். விஷயம் மிக கடுமையானதாக இருந்தால், தக்க நிபுணரை கலந்தாலோசித்து, அவர் ஆலோசனைப்படி
செயல்பட வேண்டும்.அதேசமயம், வரித்துறை, நோட்டீசுக்கு
பதில் அளிக்காமல் இருந்தால், விளைவுகள்
கடுமையாக இருக்கும். எல்லா நோட்டீஸ்களும், மென்பொருள்
உதவியுடன் அனுப்பப்படுவதால், நீங்கள் பதில்
தந்து விட்டீர்களா என்பதை சரிபார்க்க, வரித்துறையால்
முடியும். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
thanks thanthi news
Comments
Post a Comment