வருமான வரி விலக்கு உச்ச வரம்பை இரட்டிப்பாக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தொழிற்துறை
வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்க தொழிற்துறை கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசுக்கு பரிந்துரை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் வருவதையொட்டி பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்படவுள்ளது, இதனையடுத்து பல்வேறு பரிந்துரைகளை தொழிற்துறை கூட்டமைப்பு மத்திய அரசுக்கு மேற்கொண்டுள்ளது.
அதே போல் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கான 30% வருமான வரி விதிப்பை 25% ஆகக் குறைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
தற்போது ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது, ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனை ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த சிஐஐ, ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 10% வரி விதிப்பும் ரூ.10-20 லட்சம் வருவாய் உடையோருக்கு 20% வரிவிதிப்பும் 20 லட்சத்துக்கும் மேல் வருவாய் உடையோருக்கு 25% வரிவிதிப்பும் செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
சிஐஐ-யின் பிற பரிந்துரைகள்:
கார்ப்பரேட் வரி விற்பனை என்னவாக இருந்தாலும் 25% ஆக குறைக்கப்பட வேண்டும். இதனை படிப்படியாக 18% ஆக குறைக்க வேண்டும்.
வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சி-யின் கீழ் கழிவு விகிதத்தை ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தினால் சேமிப்புக்கு வழிவகை செய்ய முடியும்.
“மருத்துவச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகளை திரும்பப் பெறுதலுக்கான விலக்குகள் ரூ.40,000 என்ற ஸ்டாண்டர்ட் கழிவுகளுடன் மீண்டும் அமல்செய்யப்பட வேண்டும்” என்று சிஐஐ பரிந்துரைத்துள்ளது.
ஓய்வுகால ஊதியத் தொகைக்கான நிறுவனதாரரின் பங்களிப்பு முற்றிலும் அகற்றப்பட்டு இரட்டை வரிவிதிப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
Comments
Post a Comment