வங்கியில் FD வைத்திருப்பவர்கள் & வீடு வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!
வருமான வரித் துறையினர் எப்போதும், ஏப்ரல் முதல் வாரத்தில் தான், புதிய வருமான வரிப் படிவங்களை வெளியிடுவார்கள். அந்த படிவத்தைக் கொண்டு தான் முந்தைய நிதி ஆண்டுக்கான வருமானத்தைக் கணக்கிட்டு வரி செலுத்த வேண்டும்.
அதோடு, யார் யார், எந்த படிவங்களை நிரப்ப வேண்டும் என்பதையும் விளக்கிச் சொல்வார்கள். ஆனால், இந்த முறை, யார் எந்த படிவங்களை நிரப்பக் கூடாது என, ஜனவரி 2020-லேயே சொல்லிவிட்டார்கள்.
அந்த மாற்றங்களைத் தான் இப்போது ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம்.
சாதாரண நபர்
சாதாரண நபர்
ஒரு நபர், சாதாரண சம்பளம் வாங்கி, தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார் என்றால்... அவர் வருமான வரிப் படிவம் - 1 சஹஜ் (ITR - 1 Sahaj) நிரப்பிச் சமர்பிக்க வேண்டும். அந்த தனி நபருக்கு ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. எந்த நிறுவனத்திலும் இயக்குநராக இருக்கக் கூடாது, பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்து இருக்கக் கூடாது.
வங்கி FD வைத்திருப்பவர்கள்
வங்கி FD வைத்திருப்பவர்கள்
ஒரு தனி நபரின் பெயரில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார் என்றால்... அவர் இனி, இந்த வருமான வரிப் படிவம் 1-ஐ நிரப்பக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள். அப்படி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் வைத்திருப்பவர்கள் எந்த படிவத்தை நிரப்ப வேண்டும் எனவும் சொல்லவில்லை.
விளக்கம் இல்லை
விளக்கம் இல்லை
ஒரு நபர் ஒரே வங்கியில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்து இருப்பவரா அல்லது அனைத்து வங்கிகளையும் சேர்த்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாதா, நிதி ஆண்டுக்கா அல்லது காலண்டர் ஆண்டுக்கா, வட்டி சேர்த்தா, சேர்க்காமலா என முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. எனவே இந்த சந்தேகங்களுக்கு உங்கள் ஆடிட்டர்களிடம் ஒரு முறை கலந்து ஆலோசிப்பது நல்லது.
வீடு வைத்திருப்பவர்கள்
வீடு வைத்திருப்பவர்கள்
வங்கி FD போல... ஒரு வீட்டுக்கு, இரண்டுக்கு மேற்பட்டவர்கள் உரிமையாளர்களாக இருக்கும் போது, வீட்டு உரிமையாளர்கள் யாரும், வருமான வரிப் படிவம் 1 சஹஜ்ஜை நிரப்பிச் சமர்பிக்கக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறது வருமான வரித் துறை. அதோடு எல்லா விட்டு உரிமையாளர்களும், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
மின்சார கட்டணம் + வெளிநாட்டு பயணம்
மின்சார கட்டணம் + வெளிநாட்டு பயணம்
ஒரு நபர், வெளி நாட்டுப் பயணத்துக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து இருக்கிறார் என்றால், அவர் ஐடிஆர் 1 வருமான வரிப் படிவத்தை நிரப்ப முடியாது. அதே போல ஒரு நபர், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தியவர்களும் இந்த ஐடிஆர் 1 படிவத்தை நிரப்பக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.
தெளிவு இல்லை
தெளிவு இல்லை
மேலே சொன்னது போல வெளிநாட்டுப் பயணத்துக்கு 2 லட்சம் ரூபாய் செலவு என்பது ஒரே பயணத்துக்கா அல்லது ஒரு நிதி ஆண்டின் மொத்த பயணத்துக்கா என விளக்கவில்லை. அதே போல, மின்சாரக் கட்டணம் ஒரு மாதத்துக்கா அல்லது ஒரு வருடத்துக்காக, நிதி ஆண்டுக்கா அல்லது காலண்டர் ஆண்டுக்கா எனவும் விளக்கவில்லை.
கூடிய விரைவில் இந்த கேள்விகளுக்கு வருமான வரி விளக்கம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இல்லை என்றால் உங்கள் ஆடிட்டர்களிடம் இந்த சந்தேகங்களைக் கேட்டு தெளிவு அடையவும்.
Comments
Post a Comment