ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

வருமான வரித் தாக்கலுக்கான ரீபண்ட் தொகையைப் பெறுவது தொடர்பாகப் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றை நம்பவேண்டாம் என்று வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரித் தாக்கலுக்கான ரீபண்ட் (திருப்பிப் பெறப்படும் தொகை) குறித்து வருமான வரி செலுத்துவோர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் இணைய இணைப்பு அனுப்பப்படுவதாகச் சென்னை வருமானவரித் துறை அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போலியானவை எனவும், அவற்றை நம்பவேண்டாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சென்னை முதன்மை தலைமை வருமான வரி அலுவலகத்தின் கூடுதல் ஆணையர் ஆர்.இளவரசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனிநபர் அடையாள எண், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (one time password), கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் கடவுச்சொல் குறித்த தகவல்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரம், ஏடிஎம் கடவுச்சொல் ஆகியவற்றை மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது தொலைப்பேசி மூலம் வருமான வரித்துறை கேட்பதில்லை. வருமான வரி செலுத்துவோர் தங்களது முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்களை வருமானவரித் துறையின் இணையதளத்தில்பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மற்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் குறுஞ்செய்திகளை வருமான வரி செலுத்துவோர் நம்பாமல் எச்சரிக்கையோடு இருக்குமாறு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

Comments

Popular posts from this blog

மத்தியில் பணிபுரிபவர்கள் எட்டாவது ஊதியம் சார்நத்து ஊழியர் இணையதளம் என்ற இணையதளத்தில் எவ்வளவு என வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணை பட்டியல்

ALL AGE AUTOMATIC INCOME TAX SOFTWARE FY 2024-25 AY 2025-26 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2024-2025 INCOME TAX SOFTWARE FY 2024-2025 FOR TAMILNADU GOVERNMENT STAFFS

IFHRMS MOBILE APPLICATION NEW VERSON ISSUES