Logo
TEACHER INCOME TAX - ANITHA VISWANATH (9629803339)
HOME INFORMATION ▾ INCOME TAX ▾ FORM 39 ▾ 10E SOFTWARE TPF / CPS / GPF ▾ PENSION ▾ ITR TDS GST

வீட்டுக் கடன் கணவன் & மனைவி இருவருக்கும் பிடித்தம் செய்யும் பட்சத்தில் இருவருக்கும் HRAயை கழிக்க முடியாதா?

வீட்டுக் கடன் கணவன் & மனைவி இருவருக்கும் பிடித்தம் செய்யும் பட்சத்தில் இருவருக்கும் HRAயை கழிக்க முடியாதா?


வீட்டு வாடகைப்படி (HRA) சில விளக்கங்கள்:-
(i) வீட்டு வாடகைப்படி வரிவிலக்கு பெற வேண்டுமானால் நீங்கள் வீட்டு வாடகை செலுத்தியிருக்க வேண்டும்.
(ii) வீட்டு வாடகைப்படி முழுவதுமாக வரிவிலக்கு பெற வேண்டுமானால் உங்கள் வருடாந்திர வாடகைப்படியுடன் 10% அடிப்படை
ஊதியம் மற்றும் அகவிலைப்படியை கூட்டிக் கொள்ளவும். நீங்கள் செலுத்தும் வருட வீட்டு வாடகை இத்தொகைக்கு மேல் வருமானால்
வீட்டு வாடகைப்படி முழுவதும் வரிவிலக்காக பெற முடியும்.(iii) பெற்றோருக்கு வாடகை கொடுக்கும் பட்சத்தில், வாடகைப்படியின் வரிவிலக்கு பெறலாம்.
(iv) கணவன்- மனைவிக்கு இடையே வாடகை செலுத்தியிருந்தாலும் முறையான வாடகை ரசீது இருந்தால் விலக்கு பெறலாம்.
(v) வீட்டு வாடகைப்படி மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி இரண்டினையும் கீழ்க்கண்ட சமயங்களில் வரிச்சலுகையாக பெற முடியும்.
1. பணியாற்றும் இடமும், வீட்டு கடனுக்கான வீடும் வெவ்வேறு நகரங்களில் அமைந்திருந்தால்.
2. இரண்டும் ஒரே நகரமாக இருந்தாலும், வீட்டு கடனுக்கான வீடும், பணியாற்றும் இடமும் கணிசமான
தொலைவிலிருந்து. நீங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தால்.
3. வீட்டு கடனுக்கான வீட்டில் உங்கள் பெற்றோர் குடியிருந்து, நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால்
மேற்குரியவை தங்களுக்கு பொருந்தியிருந்தால் வீட்டு வாடகைப்படியையும் வீட்டு கடனுக்கான வட்டியையும் வரிவிலக்காக பெறப்படும்.
(vi) உங்கள் சம்பள பட்டியலில் வீட்டு வாடகைப்படி (HRA) பெறவில்லை எனில் வீட்டு வாடகைப்படி வரிவிலக்குக்கு பதிலாக, பிரிவு
80GG படி வீட்டு வாடகை செலுத்தியிருந்தால் அதிகபட்சம் ரூ.60,000/-- வரிவிலக்காக பெற முடியும்.
(vii) நீங்கள் வீட்டு வாடகை ரூ. 3000/- த்திற்கு மேல் செலுத்தியிருந்தால் வாடகை ரசீதை சமர்பிக்க வேண்டும்.
(viii) நீங்கள் வருடத்திற்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்தியிருந்தால் (மாதத்திற்கு ரூ.8,333pm) வீட்டு உரிமையாளரின் நிரந்தர
கணக்கு எண்ணை சமர்பிக்க வேண்டும். நிரந்தர கணக்கு எண் இல்லையெனில் உரிமையாளர் அதனைப்பற்றிய சான்றிதழ் கடிதம் தர
வேண்டும்.
வீட்டுக்கடன் - வட்டி மற்றும் அசல்:-
1.வீடு கட்டுவதற்காக (அ) வாங்குவதற்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியினை ரூ.2 லட்சம் வரையிலும் (பிரிவு 24B)
அசலினை ரூ.1,50,000/-- வரையிலும் (பிரிவு 80C) வருமானத்திலிருந்து நீக்கி, வரிச்சலுகை பெற முடியும். இக்கடனானது 1.4.1999க்கு
பிறகு பெற்றிருத்தல் வேண்டும். அதற்கு முன் பெற்றிருந்தால் ரூ.30,000/-- மட்டுமே வரிச்சலுகையாக பெற முடியும். மற்றும் வீட்டு கடன்
வாங்கிய தேதியிலிருந்து மூன்று வருடத்திற்குள் வீடு கட்டியோ, வாங்கியோ இருத்தல் வேண்டும்.
2.வீடு புதுப்பித்தல் (அ) மறு சீரமைப்புக்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியினை ரூ.30,000/- வரை (பிரிவு 24B)
வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும். செலுத்திய அசலுக்கு வரிச்சலுகை பெற முடியாது.
3.வீடு கட்டி முடிப்பதற்குள் வீட்டுக் கடனுக்கான வட்டியை, செலுத்தியிருந்தால் 5 பாகங்களாக பிரித்து செலுத்திய தொகையை, கட்டி
முடித்த வருடத்திலிருந்து அவ்வருட வட்டியினையும் சேர்த்து ஒவ்வொரு பகுதியாக 5 வருடங்களுக்கு வருமானத்திலிருந்து நீக்கி
வரிசலுகையை பெற முடியும்.
4.வீட்டுக் கடனை அடைப்பதற்கு இரண்டாவதாக வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதற்கான கடனுக்கும் வட்டி (அ) அசல் வரிச்சலுகை
உண்டு.
5.வீடு கட்டுவதற்கோ (அ) வாங்குவதற்கோ வங்கியில் மட்டுமல்லாமல்; நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கடன் பெற்று அதற்கு
வட்டி செலுத்தியிருந்தால் அவர்களிடம் வட்டி செலுத்தியதற்கான சான்று பெற்று அவ்வட்டியினை வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை
பெற முடியும். ஆனால் செலுத்திய அச... Read more

Comments

PREVIOUS IMPORTANT POSTS
Loading grid...