அரசு ஊழியர்கள் தவறாக வருமான வரி தாக்கல் செய்தால் வழக்கு வரும்
மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வருமான வரி கணக்கில் மோசடி செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.அந்தவகையில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து அரசு, தனியார் துறையை சேர்ந்த ஆயிரம் ஊழியர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை பாயப்போகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் விளக்கம் அளித்துள்ளார். வருமான வரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை புதிய வருமான வரி முறைப்படி ஆண்டுக்கு 7.25 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரியாக ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியது இல்லை.. அதேபோல் பழைய வருமான வரிமுறைப்படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்ட தேவையில்லை..(இப்போது மாறிவிட்டது). இதில் பழைய முறைப்படி 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.அதேபோல் வரியும் குறைவாவே கட்ட வேண்டியதிருக்கும்.. இதில் பல்வேறு சேமிப்பு, காப்பீடு மற்றும் லோன் போன்றவற்றை கணக்கு காட்ட வேண்டும். இந்நிலையில் மத்திய, மாநில அரசு பொத...